Advertisment

ராஜபக்சே குடும்பத்தில் ஆண் வாரிசு...!

srilanka former president rajabakse grandson

ஈழத்தில் முழுமையாக இன அழிப்பில் ஈடுபட்டவர் முன்னாள் ஜனாதிபதியும் இப்போதைய பிரதமருமான ராஜபக்சே என்பது உலகமே அறிந்ததுதான். தமிழ் இனத்தின் மீது நடத்தப்பட்ட கொடூர போரில் கொத்து கொத்தாய் தமிழ் இனம் பலியாகியது. அந்தக் கண்ணீரும் கதறலும் எப்போதும் அழியாத வடு. ஆனால் ராஜபக்சே தொடர்ந்து இலங்கை அரசியலில் முதன்மையான ஆதிக்கத்தில் இருந்து வருகிறார். அவர் மட்டுமல்ல அவரது குடும்பமும் இலங்கை அதிகாரத்தில் பங்கு வகிக்கிறது. அந்நாட்டின் விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் விவகார அமைச்சரும்பிரதமர் ராஜபக்சேவின் மகனுமானநாமல் ராஜபக்விற்கு இன்று (12/09/2020)ஆண் குழந்தை பிறந்துள்ளது.

Advertisment

நாமல் ராஜபக்சே சென்ற 2019-ஆம் ஆண்டு செப்டெம்பர் 12 ஆம் தேதி லிமினி என்ற சிங்கள பெண்னை திருமனம் செய்தார். இன்று அவர்களின்திருமண நாள். திருமண நாளோடு சேர்ந்து குழந்தை பிறந்த மகிழ்ச்சியையும் கொண்டாடும் நிலையில், ராஜபக்சே குடும்பம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

rajabakshe srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe