கடந்த ஏப்ரல் மாதம் 21ம் தேதி இலங்கையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் உலகையே உலுக்கியது. இதில் ஏராளமான மக்கள் உயிரிழந்தனர்.
இந்த சம்பவத்தில் தொடர்புடைய சஹ்ரானின் மிக நெருங்கியவர்களில் ஒருவனான முகமது மில்கான் சவுதி அரேபியாவில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில், அவனிடம் சிஐடி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அப்போது அவன் இலங்கையின் பல்வேறு பகுதிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை பற்றி கூறினான்.
அதன்படி, சிஐடி அதிகாரிகள் சோதனை நடத்தினர். அப்போது மட்டக்களப்பு அருகேயுள்ள காத்தான்குடி ஒல்லிக்குளம் பகுதியில் மறைத்துவைக்கப்பட்டிருந்த வெடிபொருட்களை கண்டறிந்தனர். ஜெலக்னைட் குச்சிகள், 8 கிலோ வெடிமருந்து, துப்பாக்கி ரவைகள், டெட்டனேட்டர்கள் உள்ளிட்டவை நிலத்தில் புதைக்கப்பட்டு கிடந்தது என்பது குறிப்பிடத்தக்கது.