வருடந்தோறும் பிப்ரவரி14 ஆம் தேதி, காதலர் தினமாக உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த காதலர்தினத்தைமுன்னிட்டுகாதலர்களுக்காவே பல்வேறு நிகழ்ச்சிகள் உலகம் முழுவதும் நடத்தப்படுவது வழக்கம்.
இந்த நிலையில் காதலர்தினகொண்டாட்டங்களுக்கு இலங்கைதடை விதித்துள்ளது. கரோனா பரவல் காரணமாகஇந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தடையை மீறி காதலர்தினத்தன்றுகொண்டாட்டங்களில் ஈடுபடுபவர்கள் கைதுசெய்யப்படுவார்கள் எனவும் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
இதுகுறித்து இலங்கையின் காவல்துறைஊடகபேச்சாளர் அஜித்ரோகன, “சுகாதாரத்துறையின் அனுமதியின்றி சட்ட விரோதமாக, காதலர் தின கொண்டாட்டத்தில் ஈடுபட்டால், கொண்டாட்டத்தில் ஈடுபட்டவர்களும், அதனை ஏற்பாடு செய்தவர்களும் கைது செய்யப்படுவார்கள்” எனத் தெரிவித்துள்ளார்.