இந்தியாவில் கரோனா பரவல் மோசமடைந்துள்ளது. தினசரி கிட்டத்தட்ட 4 லட்சம் பேருக்கு கரோனா உறுதியாகிவருகிறது. இந்தியாவில் கரோனா பரவல் தீவிரமடைந்ததையடுத்து, தங்கள் நாட்டில் கரோனா பரவுவதை தடுக்கவும், இந்தியாவில் பரவிவரும் புதிய வகை கரோனா வைரஸ்கள் தங்கள் நாட்டில் நுழையாமல் தடுக்கவும் உலகின் பல்வேறு நாடுகள், இந்தியர்கள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளன.
ஆஸ்திரேலியா, நியூசிலாந்து உள்ளிட்ட சில நாடுகள், தங்கள் நாட்டு குடிமக்கள் இந்தியாவில் இருந்து சொந்த நாட்டிற்கு திரும்பத் தடை விதித்துள்ளன. இந்தநிலையில், இந்தியாவின் அண்டை நாடான இலங்கையும், இந்தியப் பயணிகள் தங்கள் நாட்டிற்கு வர தடை விதித்துள்ளது. இதற்கான உத்தரவை இலங்கை விமானத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.