Advertisment

ஆஸ்திரேலியாவில் கைதான இலங்கை கிரிக்கெட் வீரருக்கு ஜாமீன்

Sri Lankan cricketer arrested in Australia granted bail

ஆஸ்திரேலியாவில் 8-வது டி20 உலகக்கோப்பை நடந்தது. சூப்பர்-12 சுற்றில் இலங்கைஅணி தோல்வியுற்று அரையிறுதிப் போட்டிக்குத்தகுதி பெறாமல் வெளியேறியது.

Advertisment

இலங்கை அணியின் கடைசிப் போட்டி முடிந்ததும் இலங்கை கிரிக்கெட் வீரர் தனுஷ்ககுணதிலக்கஆஸ்திரேலியக் காவல்துறையினரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டார்.பெண் ஒருவர் அளித்த பாலியல் புகாரில் தனுஷ்ககுணதிலக்கவை சிட்னி காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.

Advertisment

சூப்பர்-12 சுற்றில் இங்கிலாந்து உடனானப் போட்டியில் தோற்ற இலங்கை அணி போட்டி முடிந்ததும் குணதிலக்ககைது செய்யப்பட்டதால், அவரை விட்டுவிட்டு தாயகம் திரும்பியது.

இந்நிலையில், கைதான தனுஷ்க குணதிலக்கவிற்கு ஜாமீன் வழங்கி ஆஸ்திரேலிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 11 நாட்களாக சிறையிலிருந்த அவருக்கு ஆஸ்திரேலிய நீதிமன்றம் தற்போது ஜாமீன் வழங்கியுள்ளது.

ஜாமீனில் விடுவிக்கப்பட்டாலும் அவருக்கு ஏகப்பட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

cricketer srilanka
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe