Advertisment

மைத்ரிபால சிறிசேனவுக்கு நள்ளிரவில் வந்த கடிதம்!

இலங்கையில் தேவாலயங்களிலும் நட்சத்திர ஹோட்டல்களிலிலும் நடந்த குண்டு வெடிப்பு பயங்கரம் இலங்கையை மட்டுமல்ல ; உலக நாடுகளையே அதிர்ச்சியடைய வைத்தது. 9 இடங்களில் நடந்த தொடர் குண்டு வெடிப்புகளை தொடர்ந்து, பாதுகாப்பு ஏற்பாடுகளை பலப்படுத்தும் முகமாகவும், மேலும் குண்டுகள் வைக்கப்பட்டிருக்கிறதா என்பதை கண்டறிவதற்காகவும் இலங்கையில் அவசர நிலையை பிரகடணப்படுத்தியிருந்தார் அதிபர் மைத்ரிபால சிறிசேன.

Advertisment

Maithripala Sirisena

உளவுத்துறையும் புலனாய்வு துறையும் இலங்கையை சல்லடைப் போட்டு சளித்து எடுத்து வருகிறது. தற்கொலை குண்டு தாக்குதல் குறித்து முன்கூட்டி தகவல் தெரிவிக்கப்பட்டும் அதனை அலட்சியப்படுத்தியதாக இலங்கை பாதுகாப்புத்துறை மற்றும் உளவுத்துறை மீது குற்றசாட்டுகள் எழுந்த நிலையில் பாதுகாப்புத்துறையின் செயலாளர் ஃபெர்ணாண்டோ உள்பட 9 நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார் சிறிசேன. இந்த நிலையில், தனது பதவியை நேற்று இரவு ராஜினாமா செய்தார் ஃபெர்ணாண்டோ.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="8689919482"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

Advertisment

இலங்கையில் ஓரளவுக்கு அமைதி திரும்பி வருவதாக சொல்லப்பட்ட நிலையில், மீண்டும் ஒரு தற்கொலைப்படை தாக்குதல் நடத்தப்படலாம் என அதிபர் சிறிசேனவின் பாதுகாப்புப் படை பிரிவினருக்கு நேற்று நள்ளிரவில் கடிதம் எழுதியிருக்கிறார் இலங்கையின் காவல்துறைத் தலைவர் ஜயசுந்தரவினா. இந்த முறை பள்ளிவாசல்கள் குறி வைக்கப்பட்டிருக்கிறது என அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருப்பதாக கொழும்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனால், பாதுகாப்புத்துறையினரை மேலும் உஷார் படுத்தியிருக்கிறது இலங்கை அரசு.

letter Police chief srilanka maithripala sirisena
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe