Advertisment

வன்முறை காடாக மாறிய இலங்கை! 

SRI LANKA INCIDENT PEOPLES AND GOVERNMENT

இலங்கையில் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற வன்முறைத் தொடர்பான காட்சிகள் வெளியாகியுள்ளன.

Advertisment

இலங்கையில் அரசுக்கு எதிராகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களின் மீது தாக்குதல் நடத்தியவர்கள், சிறையில் இருந்து அழைத்து வரப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. போராட்டக்காரர்கள் மீது வீசியெறியப்படும் கண்ணீர் புகைக்குண்டுகளை சாலைப் பாதுகாப்பு கூம்புகளை வைத்து செயலிழக்க செய்கின்றனர்.

Advertisment

போராட்டத்தில் ஈடுபட்ட சிலர் உணவகம் ஒன்றில் இருந்து சமையல் எரிவாயு சிலிண்டர்களையும் எடுத்துச் சென்றனர். அரசியல்வாதிகள் 35- க்கும் மேற்பட்டோரின் வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. முன்னாள் அமைச்சர் குமார் வெல்காமா பயணம் செய்த வாகனம் மீது தாக்குதல் நடத்தப்பட்டதில், அவர் காயமடைந்து சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகளுக்கு போராட்டக்காரர்கள் தீ வைத்தனர். தொடரும் இதுபோன்ற சம்பவங்களால் இலங்கை வன்முறை காடாக மாறியுள்ளது.

government
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe