Advertisment

இலங்கை அதிபராகிறார் கோத்தபய ராஜபக்சே!

இலங்கையில் 8- வது அதிபரை தேர்வு செய்வதற்கான தேர்தல் நேற்று (16/11/2019) நடந்தது. இதில் சுமார் 81.52% வாக்குகள் பதிவாகின. அதை தொடர்ந்து வாக்கு எண்ணும் பணி நடைபெற்று வருகிறது. அதிபர் தேர்தலில் பல்வேறு கட்சிகளை சேர்ந்த 35 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

Advertisment

SRI LANKA ELECTION 2019 GOTABAYA RAJAPAKSE WIN FOR PRESIDENT

இதில் இலங்கை பொதுஜன முன்னணி வேட்பாளர் கோத்தபய ராஜபக்சே 45,22,474(50.80%) வாக்குகள் பெற்று வெற்றி பெறும் நிலையில் உள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாச 38,56,156 (43.32) வாக்குகள் பெற்று தோல்வி. இருப்பினும் வாக்கு எண்ணிக்கை முழுமையாக நிறைவடையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment

SRI LANKA ELECTION 2019 GOTABAYA RAJAPAKSE WIN FOR PRESIDENT

இலங்கை அதிபர் தேர்தலில் தோல்வியை ஒப்புக்கொண்டுள்ளார் புதிய ஜனநாயக முன்னணி சஜித் பிரேமதாச. மேலும் மக்களின் தீர்ப்பை ஏற்று கொள்வதாக சஜித் அறிவிப்பு. அதேபோல் இலங்கையின் புதிய அதிபராக வெற்றி பெற்றுள்ள கோத்தபய ராஜபக்சேவை பாராட்டுகிறேன் என்றார். மேலும் தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று இலங்கையின் ஐக்கிய தேசியக் கட்சியின் துணை தலைவர் பதவியில் இருந்து சஜித் விலக்கினார்.

இலங்கை அதிபர் தேர்தல் வரலாற்றில்சிங்களர் மக்களின் வாக்குகளை மட்டும் பெற்று அதிபராக பொறுப்பேற்கும் முதல் அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆவர்.

இலங்கையின் 8- வது அதிபராக கோத்தபய ராஜபக்சேவின் வெற்றியை, தேர்தல் ஆணையம் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்க உள்ளது. அதை தொடர்ந்து அதிபராக கோத்தபய ராஜபக்சே பொறுப்பேற்கவுள்ளார்.

win GOTABAYA RAJAPAKSE PRESIDENT ELECTION Sri Lanka
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe