sri lanka economic crisis government vs peoples

இலங்கையில் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது குறித்து ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் கவலைத் தெரிவித்துள்ளனர்.

Advertisment

இலங்கையில் அரசுக்கு எதிரான போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை நள்ளிரவு முதல் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. அவசர நிலையைப் பிரகடனம் செய்வதால், நாட்டின் எந்த பிரச்சனைக்கும் தீர்வு காண முடியாது என இலங்கைக்கான ஐரோப்பிய யூனியன் தூதரகம் தெரிவித்துள்ளது.

Advertisment

தெற்காசியாவின் பழமையான ஜனநாயக நாடான இலங்கையில் மக்கள் தங்கள் உரிமைக்காக, கடந்த ஒரு மாத காலமாக அமைதியான வழிகளில் போராடிக் கொண்டிருப்பதாகவும், நாட்டின் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்றும் ஐரோப்பிய யூனியன் தெரிவித்துள்ளது.

அமைதியான முறையில் போராடும் இலங்கை மக்களின் குரலுக்கு அரசு செவி சாய்க்க வேண்டும் எனக் கூறியுள்ள ஐரோப்பிய யூனியன் தூதரகம், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்லும் நீண்டகாலத் தீர்வைத் தான் மக்கள் எதிர்நோக்கி இருப்பதாகவும், அவசர நிலைப் பிரகடனம் எதற்கும் தீர்வாகாது என்றும் கூறியுள்ளது.

Advertisment

ஸ்சுவிட்சர்லாந்து, கனடா உள்ளிட்ட நாடுகளும், இலங்கை மனித உரிமை ஆணையமும் அவசர நிலைப் பிரகடனத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.