/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SRI 12.jpg)
உடல் நலக்குறைவால் உயிரிழந்த இலங்கை அமைச்சர் ஆறுமுகன் தொண்டைமானுக்கு, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே உள்ளிட்டோர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
கொழும்புவில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான குடியிருப்பில் தங்கி இருந்த இலங்கை அமைச்சரும், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவருமான ஆறுமுகன் தொண்டைமான், கடந்த செவ்வாய் (மே 26- ஆம் தேதி) இரவு திடீரென மயங்கி விழுந்தார். அவரை அங்கிருந்தவர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றபோது, ஏற்கனவே மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்ததை மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/SRI 789.jpg)
இதையடுத்து, ஆறுமுகன் தொண்டமானின் உடல் அரசியல் பிரமுகர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்களின் இறுதிஅஞ்சலிக்காக இன்று (28-05-2020) பாராளுமன்ற வளாகத்தில் வைக்கப்பட்டது. அப்போது இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே, பிரதமர் மஹிந்த ராஜபக்சே, அமைச்சர்கள், தூதரக அதிகாரிகள் உள்ளிட்ட முக்கிய பிரமுகர்கள் அஞ்சலி செலுத்தினர். இதனிடையே, மறைந்த அமைச்சர் ஆறுமுகம் தொண்டமானுக்கு பதிலாக அவரது மகன் ஜீவன் தொண்டமானை, பொதுத் தேர்தலில் நுவரெலியா மாவட்டத்தில் போட்டியிடுவதற்கு அனுமதிக்க வேண்டும் என, பிரதமர் மஹிந்த ராஜபக்சேவிடம் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் கோரிக்கை விடுத்துள்ளது.
Follow Us