/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/fuel32323.jpg)
கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வரும் இலங்கை இந்தியாவைத் தொடர்ந்து, சீனாவிடமும் கடன் உதவியைக் கோரியுள்ளது.
இலங்கை அரசிடம் அந்நிய செலாவணி தட்டுப்பாடு நிலவுவதால், உணவு, எரிபொருள், மருந்துபோன்ற அவசியப் பொருட்களைக் கூட வாங்க முடியாத நிலையில் பொதுமக்க தவித்து வருகின்றனர். நிதி நெருக்கடியை சமாளிக்க, இந்தியாவிடம் இலங்கை கடந்த வாரம் 100 கோடி டாலர்கள், அதாவது, 7,500 கோடி ரூபாய் கடன் பெற்றது. இந்த நிலையில், சீனாவிடமும் 250 கோடி டாலர்கள், அதாவது 19,000 கோடி ரூபாய் கடன் உதவியை இலங்கை கோரியுள்ளது.
இலங்கை கேட்ட தொகை அளிப்பது குறித்து, பரிசீலித்து வருவதாக சீனா தெரிவித்துள்ளது. இதற்கிடையே, இலங்கைக்கு உதவி அளிக்கும் போது, அந்த சூழ்நிலையைத் தங்களுக்கு சாதமாக பயன்படுத்திக் கொள்ள மாட்டோம் என்று இலங்கைக்கான சீனத் தூதர் தெரிவித்துள்ளார்.
இந்தியா, சீனா தவிர சர்வதேச நிதியத்திடமும் இலங்கை கடன் உதவி கோரியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)