Skip to main content

இலங்கை குண்டுவெடிப்பு - பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்வு

Published on 22/04/2019 | Edited on 22/04/2019

 

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது.

 

s

 

இலங்கை தலைநகர் கொழும்புவில்  3 கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் 4 ஓட்டல்கள் குடியிருப்பு வளாகம் என 8 இடங்களில் நடைபெற்ற தொடர் குண்டு வெடிப்பு சம்பவங்களில் பலியானோர் எண்ணிக்கை நேற்ரு இரவு 8 மணி நிலவரப்படி 215 ஆக உயர்ந்தது.   இந்நிலையில் இன்று காலை நிலவரப்படி பலியானோர் எண்ணிக்கை 290 ஆக உயர்ந்துள்ளது. 

 

குண்டுவெடிப்பில் காயமடைந்த 500 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

 

தொடர் குண்டுவெடிப்பை அடுத்து  ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டிருந்தது.   இன்று காலை 6 மணியுடன் ஊரடங்கு உத்தரவு  விலக்கிக்கொள்ளப்பட்டுள்ளது. 

 

சார்ந்த செய்திகள்

Next Story

இலங்கை குண்டுவெடிப்பு: சென்னையிலிருப்பவர்களிடம் என்.ஐ.ஏ. விசாரணை!!!

Published on 01/05/2019 | Edited on 01/05/2019

சென்னை பூந்தமல்லியிலுள்ள குடியிருப்பு வளாகத்தில் தங்கியுள்ள இலங்கையை சேர்ந்த மூவரிடம் என்.ஐ.ஏ. மற்றும் க்யூ பிரிவு காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.
 

srilanka


மண்ணடியில் நடந்த விசாரணையில் ஒருவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில்தான் இந்த விசாரணை நடக்கிறது என கூறியுள்ளனர். மேலும் இலங்கையை சேர்ந்த அந்த 3 பேர் தங்கியிருந்த வீடுகளிலும் சோதனை நடைபெறுகிறது. நேற்று குண்டுவெடிப்பு தொடர்பாக மேலும் சில வீடியோக்கள் வெளியானது குறிப்பிடத்தக்கது.