இலங்கையில் தொடர்ச்சியாக 8 இடங்களில் நடைபெற்ற வெடிகுண்டு தாக்குதலில் மொத்தம் 207பேர்உயிரிழந்த நிலையில் இந்த சம்பவம்தெடர்பாக 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ருவன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இலங்கையில் 8 இடங்களில் நடந்த அடுத்தடுத்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடைபெற்று சுமார் 207 பேர்உயிரிழந்துள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இதனால் இலங்கையில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் வதந்திகள் பரவலாம் என சமூக வலைத்தளங்களான பேஸ்புக், டுவிட்டர் போன்றவை முடக்கப்பட்டுள்ளன.

style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8689919482" data-ad-format="link" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
இந்நிலையில் இந்த கொடூர தாக்குதலுக்குஒரே குழுவைச் சேர்ந்தவர்கள்தான் காரணம்இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தற்கொலைப் படையைச் சேர்ந்தவர்கள் என இலங்கை பாதுகாப்புத்துறை அமைச்சர் ரூபன் விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருவதாகவும் இலங்கை பாதுகாப்பு துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. சம்பந்தப்பட்ட ஏழு பேரை கைது செய்யும் போது நடந்த மோதலில் காவல்துறையினர் 3 பேர் உயிரிழந்ததாகவும் ரூவன்விஜயவர்தன தெரிவித்துள்ளார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/sites/default/files/pictures/2021-09/fountain-pen-handwriting-012.jpg)