ஈராக்கில் அமெரிக்கப் படைகளால் சுட்டுக் கொல்லப்பட்ட ஈரான் படைத்தளபதி சுலைமான் கொலை சம்பவத்தில் உளவாளியாகசெயல்பட்ட நபருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
கடந்த ஜனவரி மாதம் ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸ்ஆகியோர் கொல்லப்பட்டனர். இந்த விவகாரம் இரு நாடுகளுக்கு இடையே பதட்டமான சூழலை ஏற்படுத்தியதையடுத்து, இன்று வரை இரு நாடுகளுக்கும் இடையே போர் பதட்டம் நிலவி வருகிறது.
இந்நிலையில், சுலைமான் கொலை சம்பவத்தில் உளவாளியாகச் செயல்பட்ட நபருக்கு ஈரான் மரண தண்டனை அறிவித்துள்ளது. சுலைமான் குறித்து அமெரிக்காவின் சி.ஐ.ஏ., மற்றும் இஸ்ரேல் உளவு அமைப்பான மொசாட்டுக்கு முக்கிய தகவல்களைக் கொடுத்ததற்கு மக்முத் மவுசாவி மஜ்த் என்பவரை ஈரான் போலீஸ் கைது செய்தது. அதன்பின் நடைபெற்ற விசாரணையில் சுலைமான் குறித்த தகவல்களை அந்த நபர் உளவு அமைப்புகளுக்கு அளித்தது உறுதி செய்யப்பட்டதையடுத்து அவரை தூக்கிலிட முடிவு செய்திருப்பதாக ஈரான் நாட்டு நீதித்துறை செய்தி தொடர்பாளர் கோலாம்ஹூசைன் இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.