ஸ்புட்னிக்-5 கரோனா தடுப்பு மருந்து... 40,000 பேருக்குச் சோதனை...

sputnik 5 to be tested on 40000 people

ரஷ்யாவின் 'ஸ்புட்னிக்-5' கரோனா தடுப்பு மருந்து அடுத்த வாரத்தில் 40,000 பேருக்குச் செலுத்தப்பட்டுச் சோதிக்கப்பட உள்ளது.

உலக அளவில் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி உலகநாடுகளின் பொருளாதாரத்தை ஒட்டுமொத்தமாக நிலைகுலைய வைத்ததோடு, உலகின் ஒட்டுமொத்த சிந்தனையையும் தன்பக்கம் திருப்பிய கரோனா வைரஸிற்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு நாடுகளில் ஈடுபட்டிருந்தது.ரஷ்யாதான் அதற்கான முதல் அடித்தளத்தை உலக நாடுகள் மத்தியில் பதிவு செய்தது. இதையடுத்து,தற்போது தடுப்பூசியைக் கண்டுபிடித்து பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் நிலைக்கு எடுத்துச் சென்றுள்ளது ரஷ்யா. ஸ்புட்னிக்-5 எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தத் தடுப்பூசி குறித்து பல்வேறு சர்ச்சைகள் எழுந்துள்ள நிலையில், இந்த மருந்தை அடுத்த வாரம் 40,000 ஆயிரம் பேருக்குச் செலுத்திச் சோதிக்க இருப்பதாக மருந்து தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

corona virus Russia
இதையும் படியுங்கள்
Subscribe