/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/vb_5.jpg)
உலகம் முழுவதும் கரோனா பாதிப்பு உச்சத்தில் இருந்து வருகின்றது. இதுவரை 43 லட்சத்துக்கும் அதிகமானவர்களை இந்த நோய் தாக்கியுள்ளது. 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இந்த நோயினால் உலகம் முழுவதும் உயிரிழந்துள்ளனர். இந்தியாவில் 2000- க்கும் மேற்பட்டவர்கள் இதனால் உயிரிழந்துள்ளனர். 75,000- க்கும் மேற்பட்டவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். உலகின் பல நாடுகளுக்கு கரோனா வைரஸ் பரவியுள்ள நிலையில், இதனை தங்களது நாட்டில் பரவாமல் தடுக்க உலக நாடுகள் பலவும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. பல நாடுகள் தங்கள் நாடுகளில் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தியுள்ளன.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
உலக அளவில் கரோனா பாதிப்பு அமெரிக்காவில் உச்சத்தில் இருந்து வருகின்றது. அங்கு 12 லட்சத்துக்கும் அதிகமானவருக்கு கரோனா நோய் பாதிப்பு இருந்து வருகின்றது. இதற்கு அடுத்த இடத்தில் ஸ்பெயின் இருந்து வருகின்றது.அந்த நாட்டில் இரண்டு லட்சத்துக்கும் அதிகமானவர்களுக்கு இந்த கரோனா நோய் தொற்று இருந்து வருகின்றது. ஆனால் அந்நாட்டு மக்களுக்கு நம்பிக்கை அளிக்கும் வகையில், தற்போது 113 வயது பாட்டி ஒருவர் கரோனா நோய் தொற்றில் இருந்து தற்போது குணமடைந்துள்ளார். கடந்த ஒருமாதமாக தனிமையில் இருந்து வந்த அவருக்கு தற்போது எடுக்கப்பட்ட சோதனையில் கரோனா நோய்தொற்று இல்லை என்பதுஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது. இது அந்நாட்டு மக்களுக்கு மனதளவில் நம்பிக்கை கொடுத்துள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)