உலகளவில் கரோனாவுக்குப் பலியானோர் எண்ணிக்கையும், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
உலகளவில் கரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35 ஆயிரத்தை நெருங்குகிறது. உலகளவில் கரோனாவால் 7,35,015 பேர் பாதிக்கப்பட்ட நிலையில் 1,56,122 பேர் குணமடைந்துள்ளனர்.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="8252105286" data-ad-format="auto" data-full-width-responsive="true">
ஸ்பெயினில் கரோனாவால் ஒரே நாளில் 537 பேர் பலியான நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 7,300 ஆக உயர்ந்துள்ளது. அதேபோல் ஈரானில் புதிதாக 117 பேர் உயிரிழந்ததன் மூலம் உயிரிழந்தோர் எண்ணிக்கை 2,757 ஆக அதிகரித்துள்ளது.
இந்தியாவில் கரோனா வைரஸால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,071 ஆக அதிகரித்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 29 ஆக உயர்ந்துள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களில்100 பேர் குணமடைந்துள்ளனர்.