Advertisment

தென்கொரிய முன்னாள் அதிபர் பார்க் ஜியூன் ஹைகிற்கு 24 ஆண்டுகள் சிறை 

தென்கொரியாவின் பெண் அதிபர் பார்க் ஜியூன் ஹை மீது எழுந்த பல்வேறு ஊழல் குற்றச்சாட்டுகளுக்குத் தொடர்ந்துநீதிமன்றம் அவருக்கு24 ஆண்டுகள்சிறைத்தண்டனை விதித்துள்ளது.

Advertisment

koria

சாம்சங் போன்ற பல நிறுவனங்களுக்கு சாதகமாக அரசின் கொள்கைகளை தளர்த்த பெருந்தொகையை லஞ்சமாக பெற்றதாக எழுந்த புகாரினால் பார்க்கிற்கு எதிராக தென்கொரியாவில் மக்கள் போராட்டம் வெடித்தது. இதனால் நாடாளுமன்றத்தில் கண்டன தீர்மானம் கொண்டுவந்து நான்காண்டு ஆட்சிக்காலத்திற்குள்ளாகவேபார்க் பதவி நீக்கம் செய்யப்பட்டார்.

Advertisment

அதைத்தொடர்ந்து அரசு அதிகாரத்தை தவறாக கையாண்டது மற்றும் ஊழல் வழக்குகள் போன்றவைதொடுக்கப்பட்டு கடந்த 10 மாதங்களாக வழக்கு விசாரணை நடந்துவந்தது. இதையடுத்து இன்று,அதிபர் பார்க் குற்றவாளி என தீர்ப்பளித்து 24 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது நீதிமன்றம்.

தண்டனை பெற்ற பார்க் தென்கொரியாவின் முதல் பெண் அதிபராக 2013-ல் பதவியேற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

corruption jail South Korea
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe