வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாக சமீபத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகதகவல்கள் வெளியாகின. மேலும், அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு வலுசேர்க்கும் வகையில் ஏப்ரல் 15- ஆம் தேதி நடைபெற்ற, தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. அதிபர் பதவியேற்றது முதல் கிம் அந்த விழாவில் அவர் பங்கேற்காதது அதுவே முதன்முறை ஆகும்.
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_desktop_ap_display_mr_p3', [300, 250], 'div-gpt-ad-1584956668553-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
window.googletag = window.googletag || {cmd: []};
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/nk_mobile_ap_display_mr_p1', [300, 250], 'div-gpt-ad-1584957472633-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.enableServices();
});
இந்நிலையில் சில வாரங்களுக்கு முன்பு தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான் உயிருடன் இருப்பதை உலகறிய செய்தார். இந்நிலையில் அவரின் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு அவரின் உணவுப்பழக்க வழக்கமே காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 36 வயதான கிம் 128 கிலோ எடை உடையவர். இதுவே அவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. இந்நிலையில் தற்போது மீண்டும் அவர் மாயமாகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. கரோனா பாதிப்பு காரணமாக தன்னை அவர் தனிமைப்படுத்தி கொண்டுள்ளாரா அல்லது உண்மையாகவே உடல்நிலை பாதிக்கப்பட்டுள்ளதா என்ற கோணத்தில் அமெரிக்க உளவு துறையினர் தீவிர விசாரணையில் இறங்கி உள்ளனர். தன் நாட்டில் கரோனா பாதிப்பே இல்லை என்று அந்நாட்டு அரசு அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.