கரோனாவைரஸை முடிவுக்குக் கொண்டுவரும் விதமாக அமெரிக்கா, ரஷ்யாஉள்ளிட்ட சிலநாடுகள் தடுப்பூசியைத் தயாரித்துள்ளன. அதேபோல் இங்கிலாந்து நாட்டின் ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகமும், மருந்து உற்பத்தி நிறுவனமான அஸ்ட்ராஜெனெகாவும் இணைந்து தடுப்பூசிஒன்றைத் தயாரித்தது. இந்தியாவில், அந்த தடுப்பூசியை‘கோவிஷீல்ட்’ என்ற பெயரில், சீரம்நிறுவனம், ஆக்ஸ்ஃபோர்டு பல்கலைக்கழகம் மற்றும் அஸ்ட்ராஜெனெகாவுடன் இணைந்து தயாரித்தது.
இதன்பிறகு சீரம்நிறுவனத்தின் ஒரு மில்லியன்தடுப்பூசிகளை தென் ஆப்பிரிக்கா வாங்கியதோடு, அத்தடுப்பூசிகளையும் பரிசோதித்தது. அதனைத் தொடர்ந்து அந்நாட்டு அரசு, தங்கள் நாட்டில் பரவிவரும் மரபணு மாற்றமடைந்த புதியவகை கரோனாவிற்கு எதிராக, சீரம்தடுப்பூசிகள் குறைந்த அளவு பாதுகாப்பேவழங்குவதாகக் கூறி, அத்தடுப்பூசிகளை செலுத்துவதை நிறுத்தி வைத்தது.
இந்தநிலையில் சீரம்நிறுவனத்திடம், தாங்கள் வாங்கியதடுப்பூசிகளை திரும்ப எடுத்துக் கொள்ளுமாறு தென் ஆப்பிரிக்கா கூறியுள்ளது. இதுதொடர்பாக சீரம் நிறுவனம் கருத்துத் தெரிவிக்க மறுத்துவிட்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.