தேங்காய் உரிப்பதாக நினைத்துக் கொண்டு மாமனார் ஒருவர் மருமகனின் கழுத்தை அறுத்து கொன்றுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிலிப்பைன்ஸ் நாட்டில் ரோஜர் படே என்பவர், தனது மருமகன் எட்வார்டோ மற்றும் அவரது நண்பர் என்கிரிட் உடன் சேர்ந்து மது அருந்திகொண்டிருந்தார். மது போதையில் மூவரும் தூங்கி கொண்டிருந்தனர். அப்போது திடீரென ஒரு அலறல் சத்தம் கேட்டுள்ளது. என்னவென்று எழுந்து பார்த்த எட்கிரிட்டுக்கு அதிர்ச்சி காத்திருந்தது.

Advertisment

gm

ரோஜர் தனது மருமகனான எட்வார்டோவை கண்ணை மூடியபடி கழுத்தை அறுத்துகொண்டிருந்தார். இதனை பார்த்த அவர், பயத்தில் வீட்டைவிட்டு ஓட்டம் பிடித்துள்ளார். சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தினார்கள். அதில் ரோஜருக்கு தூக்கத்தில் நடக்கும் வியாதி இருப்பதாகவும், தேங்காய் உறிப்பதாக எண்ணி தனது மருமகனின் கழுத்தை அறுத்து கொலை செய்ததாவும் தெரியவந்தது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.