Skip to main content

''பூமிக்கு என்னவோ ஆக போகுதோ..?''- பீதியை கிளப்பிய விநோத மேகக்கூட்டம்!

Published on 26/11/2021 | Edited on 27/11/2021

 

'' Something is going to happen to the earth ... '' Strange cloud that caused panic!

 

காலநிலை மாற்றம் தொடர்பான புதிய புதிய நிகழ்வுகளை உலகம் அனுதினம் சந்தித்துவருகிறது. உலகப் பந்தின் தென்பகுதியில் அமைந்துள்ள மிகப்பெரிய கண்டமான அண்டார்டிகாவில் பனிப் பாறைகள் உருகிவருவது சூழலியல் ஆர்வலர்கள் மத்தியில் பேசுபொருளாகியிருக்கும் நிலையில், சமூக வலைத்தளத்தில் இன்ஸ்டன்டாக  வைரலாகியுள்ளது வெண்பஞ்சு குவியல் மேகங்கள்.

 

அர்ஜென்டினாவில் வானில் மேகங்கள் திடீரென குவியல் குவியலாக சற்று சீரான இடைவெளியில் அடுக்கி வைத்ததைப் போல தோன்றியது. இதனைக் கண்டு ஆச்சரியமடைந்த மக்கள் அந்த விநோத மேகக்கூட்டத்தை படம்பிடித்து சோசியல் மீடியா பக்கங்களில் பதிவேற்றியதைத் தொடர்ந்து அது வைரலானது. இந்த மேகக்கூட்டங்கள் ரசிக்கும்படியாக உள்ளது என சிலரும், அய்யாயோ பார்க்கவே பயமாக உள்ளது உலகத்திற்கு என்னவோ நடக்கப்போகிறது என்று சிலரும் தங்களது கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். இன்னும் சிலர் இது போலி அனிமேஷன் எனவும் தெரிவித்து வருகின்றனர்.

 

'' Something is going to happen to the earth ... '' Strange cloud that caused panic!

 

ஆனால் இந்த மேகக்கூட்டம் உண்மைதான். இந்த நிகழ்வு மம்மடஸ் (mammatus) என்று அழைக்கப்படுகிறது என அறிவியலாளர்கள் தெரிவித்துள்ளனர். மம்மடஸ் இடியுடன் மழை அல்லது ஆலங்கட்டி மழை வருவதற்கான அறிகுறிதான் எனவும் தெரிவித்துள்ளனர்.  

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

தொடங்கிய வெயிலின் தாக்கம்; அறநிலையத்துறை வெளியிட்ட குளுகுளு அறிவிப்பு

Published on 14/03/2024 | Edited on 14/03/2024
Free Water Butter in 48 Temples

வெயிலின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில் தமிழகத்தில் உள்ள 48 கோயில்களில் இலவச நீர் மோர் வழங்கும் திட்டம் நாளை முதல் அமலுக்கு வரும் என அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தற்போதே கோடை காலத்திற்கான வெயிலின் தாக்கம் தொடங்கியுள்ளதால், பல இடங்களில் தன்னார்வ நிறுவனங்கள் மற்றும் அரசியல் கட்சியினர் சார்பாக தண்ணீர் பந்தல், நீர் மோர் பந்தல் ஆகியவை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வெயிலின் தாக்கத்தைத் தணிக்க தமிழக அறநிலையத்துறை சார்பில் தமிழகத்தில் உள்ள 48 முதல்நிலை கோவில்களில் நாளை முதல் நீர்மோர் வழங்கும் திட்டம் அமல்படுத்தப்பட உள்ளது. இதனையொட்டி நாளை சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவிலில் இலவச நீர்மோர் வழங்கும் திட்டத்தை அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தொடங்கி வைக்க இருக்கிறார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Next Story

'சிறிய அணு உலைகள்'; என்.எல்.சியின் திட்டத்தால் அதிர்ச்சி

Published on 03/03/2024 | Edited on 03/03/2024
'small nuclear reactors'; Shocked by NLC's plan

என்எல்சியில் சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க திட்டம்தீட்டி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதற்கான தகவலை என்.எல்.சி தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இந்திய அணுசக்தி கழகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. சிறிய வகை அணு உலைகள் மூலம் 300 மெகாவாட்டுக்கும் குறைவான மின்சாரம் உற்பத்தி செய்ய திட்டமிடப் பட்டுள்ளதாகவும், 2070 ஆம் ஆண்டுக்குள் ஜீரோ உமிழ்வு இலக்கை  எட்ட சிறிய அளவிலான அணு உலைகள் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் என்எல்சி-ன் தலைவர் பிரசன்ன குமார் தெரிவித்துள்ளார்.

nn

நெய்வேலி கடலூர் பகுதியில் என்எல்சிக்கு நிலம் எடுத்துக் கொடுக்கப்பட்டது  பழுப்பு நிலக்கரி எடுப்பதற்காக தான். ஆனால் அந்த பகுதியில் 300 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்கான சிறு அணு உலைகளை அமைப்போம் என்று சொல்வது மக்களுக்கு விரோதமானது. அணு உலையில் இருந்து வரக்கூடிய அணுக்கழிவுகளை கையாளக்கூடிய தொழில்நுட்பம் எந்த நாட்டிலும் கிடையாது. அப்படி சிறிய அணு உலைகள் அமைக்கப்பட்டால் அதன் கழிவுகளை என்ன செய்யப் போகிறார்கள். அதில் இருந்து வரும் கதிர்வீச்சுகள் எப்படி தடுக்கப்படும் என்பது போன்ற கேள்விகள் எழுந்துள்ளது. தமிழக அரசு மக்களின் நிலங்களை கையகப்படுத்தி கொடுத்தது எதற்காகவோ அந்த பயன்பாட்டிற்கு மட்டும் அதனை பயன்படுத்த வேண்டும். நினைத்தபடி எல்லாம் மாற்றிக் கொள்ளும் எந்த உரிமையும் என்எல்சி நிர்வாகத்திற்கு கிடையாது என பூவுலகின் நண்பர்கள் அமைப்பின் சுந்தர் ராஜன் கருத்து தெரிவித்துள்ளார்.

என்.எல்.சி சிறிய அளவிலான அணு உலைகளை அமைக்க இருப்பதாக வெளியான தகவல் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.