கடந்த வெள்ளிக்கிழமை அதிகாலை ஈராக் தலைநகர் பாக்தாத் விமான நிலையம் அருகே அமெரிக்க ராணுவத்தின் ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில், ஈரான் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் தளபதி குவாசிம் சுலைமான், ஈராக்கின் ஹஸ் அல் ஷபாபி துணை ராணுவப்படையின் துணைத் தலைவர் அபு மஹதி அல் முஹன்திஸும் ஆகியோர் கொல்லப்பட்டனர்.
var googletag = googletag || {};
googletag.cmd = googletag.cmd || [];
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
இதன் காரணமாக ஈரான் மற்றும் அமெரிக்கா இடையே பதட்டமான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில் அமெரிக்க தாக்குதலில் கொல்லப்பட்ட சுலைமானின் உடல் ஈராக்கில் இருந்து ஈரான் கொண்டுவரப்பட்டு டெஹ்ரானில் நேற்று இறுதி சடங்குகள் நடந்தன. அவரது இந்த இறுதி ஊர்வலத்தில் அஞ்சலி செலுத்துவதற்காக லட்சக்கணக்கான மக்கள் டெஹ்ரான் நகரில் கூடினர். அனைவரும் கறுப்பு நிற உடையில் தங்கள் கைகளில் கறுப்பு மற்றும் ஈரான் நாட்டு கொடிகளை ஏந்தியபடி அமெரிக்காவுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி பேரணியாகச் சென்றனர். லட்சக்கணக்கான மக்கள் அஞ்சலி செலுத்த சுலைமானின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.