Skip to main content

மலை உச்சியில் சிக்கிக்கொண்ட பாராசூட் வீரர்... 820 மீட்டர் உயரத்தில் நடைபெற்ற விபரீதம்!

Published on 13/01/2020 | Edited on 14/01/2020

பாராசூட் வீரர் ஒருவர் செங்குத்தான மலை உச்சியில் சிக்கிக்கொண்ட சம்பவம் தாய்லாந்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்தில் டிசம்பர், ஜனவரி மாதம் தேசிய குழந்தைகள் தினம் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டிற்கான கொண்டாட்டம் தற்போது வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகின்றது. இந்த விழாவில் பல்வேறு போட்டிகள் நடைபெறுவது வழக்கம். அதில் பலூன் திருவிழா மிக முக்கியமான ஒன்று. 



அந்த விழாவின் தொடர்ச்சியாக ஸ்கை ட்ரைவ் போட்டிகள் நடைபெற்றது. கிராசரின் என்ற வீரர் பாராசூட்டில் பறந்து சென்ற போது செங்குத்தான மலையுச்சியில் சிக்கி கொண்டார். தரையில் இருந்து 820 மீட்டர் உயரத்தில் சிக்கி கொண்ட அவர், அங்கிருந்து காப்பாற்றுமாறு கத்தியுள்ளார். நீண்ட நேரத்துக்கு பிறகு இதை கவனித்த விழா ஏற்பாட்டாளர்கள் அவரை காப்பாற்றும் முயற்சியில் ஆடுபட்டு வருகிறார்கள். இந்த சம்பவம் அந்நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

சார்ந்த செய்திகள்

Next Story

மோசமான வானிலை... மலைப் பகுதியில் தரையிறங்கிய ஹெலிகாப்டர்!

Published on 08/01/2022 | Edited on 08/01/2022

 

Bad weather ... Helicopter landed in the mountains!

 

மலைப் பகுதியில் உள்ள அத்தியூர் என்ற கிராமத்தில் திடீரென ஒரு ஹெலிகாப்டர் ‌தரையிறங்கியதால் அப்பகுதியில் பெரும் பரப்பு ஏற்பட்டது. 

 

இன்று (08/01/2021) காலை கர்நாடகா மாநிலம், பெங்களூரிலிருந்து கொச்சின் நோக்கிச் சென்ற தனியாருக்கு சொந்தமான அந்த ஹெலிகாப்டரில் பெங்களூரூவில் உள்ள மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் பாரத், அவரது மனைவி ஷீலா மற்றும் ஹெலிகாப்டரின் பைலட்டான முன்னாள் ராணுவ வீரர் ஜஸ்வந்த், இன்ஜினியர் அன்கித் சிங் ஆகிய 4 பேர் பயணம் செய்தனர்.

 

ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்த கடம்பூர் மலைப் பகுதியில் ஹெலிகாப்டர் பறந்த போது, வானிலை மோசமான நிலையில் காணப்பட்டதால், பைலட் சாதுர்யமாக செயல்பட்டு, மலைப் பகுதியில் உள்ள சோலைக் காட்டில் ஹெலிகாப்டரைத் தரையிறக்கியிருக்கிறார். அந்தியூர் கிராமத்தில் உள்ள பெருமாளம்மாள் என்பவரது சோள தோட்ட களத்தில் தான் ஹெலிகாப்டர் தரையிறக்கப்பட்டது. பின்பு வானிலை சரியான பிறகு ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் ஹெலிகாப்டர் கொச்சின் நோக்கி பறந்து சென்றது.

 

இது குறித்து விசாரித்ததில், மென்பொருள் நிறுவனத்தின் உரிமையாளர் கண் பரிசோதனை செய்வதற்காக பெங்களூரில் இருந்து கொச்சின் நோக்கி செல்வதற்காக ஹெலிகாப்டரில் பயணித்துள்ளனர் என்பது தெரிய வந்தது. 

 

முன்னதாக, தங்கள் பகுதியில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது குறித்து தகவல் அறிந்த மலை கிராம மக்கள், அங்கு வந்து ஹெலிகாப்டரைப் பார்த்து மகிழ்ந்தனர். 

 

Next Story

யானைகளுக்கு எமனாகும் ஹைவோல்ட் பாதுகாப்பு வேலி; மேற்குத் தொடர்ச்சியில் தொடரும் சோகம்...

Published on 26/05/2021 | Edited on 26/05/2021
High voltage electricity in the safety fence; Death of elephants in the hills

 

மேற்குத் தொடர்ச்சி மலையில் இயற்கையின் வாழ்விடமாக இயங்கிக் கொண்டிருக்கிறது ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம். பன்னாரியை கடந்து சென்றால் திம்பம், ஆசனூர், தலமலை, தாளவாடி, அரேப்பாளையம், கேர்மாளம், கடம்பூர் மலைப் பகுதியுடன் பர்கூர், விளாங்கோம்பை என நீள்கிறது. அதே போல் பவானிசாகர் வனப்பகுதியில் தெங்குமராட்டா, சிறுமுகை எனத் தொடர்கிறது.

 

தமிழகம், கர்நாடகா மற்றும் கேரளா என மூன்று மாநில வனப்பகுதியாக விரிந்துள்ள இங்கு, காட்டு யானைகள், புலி, சிறுத்தை, செந்நாய், கரடி, மான், காட்டுப் பன்றி, காட்டெருமை என வன விலங்குகளின் வாழ்விடமாக உள்ளது. அடர்ந்த காடுகளையொட்டி மலை மக்கள் வசிக்கும் கிராமங்கள், அவர்கள் விவசாயம் செய்யும் விலை நிலங்களும் உள்ளது. அடர்ந்த வனப்பகுதியிலிருந்து வெளியே வரும் வன விலங்குகள் அவ்வப்போது விவசாய நிலங்களுக்கு வந்து விவசாய பயிர்களை சேதப்படுத்துவதும் உண்டு. இதில் குறிப்பாகக் காட்டு யானைகள் தான் அதிக சேதத்தை உருவாக்கிவிட்டுச் சென்று விடுகிறது.

 

கரும்பு, சோளம், வாழை, நெல், குச்சிக் கிழங்கு உள்ளிட்ட பயிர்களை விவசாயிகள் விவசாயம் செய்து வருகின்றனர். இந்த வன விலங்குகள் விவசாய தோட்டத்திற்குள் புகுந்து விவசாய நிலங்களைச் சேதப்படுத்துவதால், தோட்டத்தைச் சுற்றி விவசாயிகள் பலர் வன விலங்குகள் ஊடுருவுவதைத் தடுக்க நிலத்தைச் சுற்றி கம்பி வேலி அமைத்துப் பாதுகாத்து வருகின்றனர். இந்த நிலையில், 23 ந் தேதி இரவு கொங்கர்பாளையத்தில் கார்த்திகேயன் என்பவருக்குச் சொந்தமான விவசாய தோட்டத்தில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று புகுந்துள்ளது.

 

High voltage electricity in the safety fence; Death of elephants in the hills

 

அப்போது அங்கு போடப்பட்ட மின் வேலியில் சிக்கி மின்சாரம் பாய்ந்து அந்த ஆண் யானை பரிதாபமாக உயிரிழந்துள்ளது. அதே போல் பவானிசாகர் வனப்பகுதி யானகராச்சிகொரை என்னுமிடத்தில் ராஜன் என்பவருக்குச் சொந்தமான ஒன்றறை ஏக்கர் நிலத்தில் வாழை பயிரிடப்பட்டிருந்தது. இது வனப்பகுதியை ஒட்டிய பகுதி என்பதால்,வன விலங்குகளிடமிருந்து பயிர்களைக் காக்க,  தோட்டத்தைச் சுற்றி மின் வேலி அமைத்திருந்தார் ராஜன். இந்த நிலையில் 25 ந் தேதி இரவு அவரது தோட்டத்திற்கு அருகே ஆண் யானை ஒன்று வந்தது. பின்னர் ராஜன் தோட்டத்துக்குச் செல்ல முயன்றபோது எதிர்பாராத விதமாக மின்வேலியில் சிக்கி அதுவும் மின்சாரம் பாய்ந்து இறந்து விட்டது. 

 

இதுகுறித்து சத்தியமங்கலம் வனத்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இரண்டே நாளில் இரண்டு யானைகள் மின்சாரம் பாய்ந்து இறந்துள்ளது வன விலங்கு ஆர்வலர்களிடையே பரிதவிப்பை ஏற்படுத்தியுள்ளது. வன விலங்குகள் விவசாய தோட்டத்திற்குள் வராமல் இருக்கக் கம்பி வேலி அமைக்கலாம்; அதைத் தொட்டால் லேசாக ஷாக் அடிக்கும் அளவுக்கு மிகக் குறைவான அளவு மின்சாரம்தான் அதில் பாய்ச்சப்பட வேண்டும். ஆனால் குறைவான அளவு மின்சாரக் கம்பிகளை யானைகள் பிடுங்கி விடுகிறது என்பதால் கம்பியைத் தொட்டால் மின்சாரம் உடலில் பாயும் அளவுக்கு ஹைவோல்ட்டு மின்சாரம் பாய்ச்சுவதால், ஏதும் அறியாத அப்பாவி வன விலங்கான காட்டு யானைகள் நிகழ்விடத்திலேயே மின்சாரம் பாய்ந்து துடிதுடித்து இறந்து விடுகின்றன. 

 

யானைகள் விளை நிலங்களில் ஊடுருவாமல் தடுக்க சுற்றிலும் அகழி அமைத்தல் அல்லது அதுபோன்ற வேறு சிக்கனமான மாற்றுத் திட்டத்தை வனத்துறையினர் தான் செயல்படுத்த வேண்டும். ஆண்டொன்றிற்கு இது போல மின்சாரம் பாய்ந்தே முப்பது முதல் ஐம்பது யானைகள் வரை மேற்குத் தொடர்ச்சி மலையில் பலியாகிறது என்கிறார்கள் வன ஊழியர்கள்.