Advertisment

வர்த்தக துறைக்குள் நுழையும் "பேஸ்புக்" நிறுவனம்!

உலகம் முழுவதும் பெரும்பாலான மக்கள் கிரிப்டோகரன்ஸி (CRYPTO CURRENCY) என்னும் டிஜிட்டல் பணத்தை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றன. இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் முன்னணியில் உள்ள நிறுவனமான "பேஸ்புக்" நிறுவனம் டிஜிட்டல் பணப்பரிமாற்றம், வர்த்தகம் உள்ளிட்ட துறைகளில் கால்பதிக்க திட்டமிட்டுள்ளது. 2020 ஆம் ஆண்டு இந்த துறையில் இணைந்து வர்த்தக ரீதியிலாக பல்வேறு மாற்றங்களை செய்ய பேஸ்புக் நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதே போல் பேஸ்புக் நிறுவனம் சார்பில் புதிய கிரிப்டோகரன்சி வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisment

FACEBOOK TEAM START CRYPTOCURRENCY AND DIGITAL MONEY TRANSACTION WILL START IN 2020

ஃபேஸ்புக். லிப்ரா என்னும் டிஜிட்டல் கரன்ஸியைப் பயன்படுத்த ‘கலிப்ரா’ என்னும் வாலட் ஒன்றையும் ஃபேஸ்புக் வெளியிட உள்ளது. ‘கலிப்ரா’ ஃபேஸ்புக்கின் மெசேஞ்சர், வாட்ஸ்அப் ஆகிய தளங்களுடனும் இணைக்கப்பட உள்ளது. சர்வதேச அளவில் சமூக வலைதள தொடர்புகளையும் தாண்டி பணப்பரிமாற்றம், ஆன்லைன் வர்த்தகம் என கால்பதிக்கத் தயாராகி வருகிறது ஃபேஸ்புக். ‘லிப்ரா’ திட்டத்தை பேபால் ( paypal ) நிறுவனத்தின் முன்னாள் தலைவரே உருவாக்கி வழி நடத்துகிறார். லிப்ரா என்றால் நீதி என்று அர்த்தமாம். பிரெஞ்சு மொழியில் இதற்கு ‘சுதந்திரம்’ என்று ஒரு அர்த்தமும் உள்ளது என லிப்ரா திட்ட வல்லுநர் டேவிட் மார்கஸ் தெரிவித்தார்.

crypto currency ENTRY AT DIGITAL MONEY Facebook world India
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe