Skip to main content

அப்படி 'வானில்' என்னதான் அதிசயம் காத்திருக்கிறது வரும் டிசம்பர் 21-ல்...?  

Published on 11/12/2020 | Edited on 12/12/2020

 

so what miracle await in the sky coming December 21?

 

உலகமே உற்றுநோக்கும் வகையில், 700 ஆண்டுகளுக்குப் பிறகு வானில் ஒரு அதிசய நிகழ்வு நடக்கப்போகிறது. அதுவும், இந்த மாதம் 21ஆம் தேதி நடைபெற இருக்கிறது.

 

அப்படி என்னதான் அதிசயம் காத்திருக்கிறது, வரும் டிசம்பர் 21 ஆம் தேதி. கணக்கில் அறியப்படாத பால்வழி அண்டங்களை உள்ளடக்கிய அண்டத்தில் நாம் வசிக்கும் பூமிப் பந்து உட்பட எண்ணிலடங்கா நட்சத்திரங்கள், கோள்கள், சூரியன் என நினைத்துப்பார்க்கவே பிரமாண்டத்தை அள்ளிவீசும் விண்வெளியில், நானூறு ஆண்டுகளுக்கு ஒருமுறை தோன்றும் கிறிஸ்துமஸ் நட்சத்திரம் வருகின்ற 21ஆம் தேதி தோன்ற இருக்கிறது.

 

மத நம்பிக்கையின் அடிப்படையில் பார்த்தால் இயேசு கிறிஸ்து பிறப்பின் பொழுது வானில் தோன்றியதாக கிறிஸ்தவர்களால் போற்றப்படும் இந்த வால் நட்சத்திரத்திற்கு 'கிறிஸ்துமஸ் நட்சத்திரம்' என்று பெயர் சூட்டி உள்ளார்கள். உண்மையிலேயே தோன்றுபவை வால் நட்சத்திரமா என்றால், இல்லை. சூரியக் குடும்பத்தில் இருந்து பல மைல் தூரத்தில் உள்ள சனி, வியாழன் ஆகிய இரு கோள்களும், 400 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒன்றுக்கொன்று அருகருகே சந்திக்கும்பொழுது, ஏற்படும் ஒளி இணைப்பே இந்த நட்சத்திரம் போன்ற ஒளி. இதுவே, கிறிஸ்துமஸ் நட்சத்திரம் என்று கூறப்படுகிறது.

 

 So what miracle awaits 'in the sky' coming December 21st?

 

பூமியிலிருந்து பார்க்கும் பொழுது இரண்டு நட்சத்திரங்கள் ஒரு சேர பிரகாசமாகக் காட்சியளிப்பதைப் போன்று தோன்றும் இந்த நிகழ்வு, மிக அரிதிலும் அரிதானது என்கின்றனர் ஆராய்ச்சியாளர்கள். இதற்கு முன்பு, இந்த விசித்திரமான நிகழ்வு, 1226-ஆம் ஆண்டு நடந்துள்ளது. 1226-க்கு பிறகு வியாழனும் சனியும் சந்தித்துக் கொண்ட நிகழ்வு மீண்டும் 1623-ஆம் ஆண்டு தோன்றியிருக்க வேண்டும். ஆனால், பல்வேறு சீதோஷண நிலைகள் காரணமாக, கிறிஸ்துமஸ் நட்சத்திரம் தெரியாமல் போனது. அடுத்த சுற்றான 2020 டிசம்பர் 21ஆம் தேதி (700 ஆண்டுகளுக்குப் பிறகு) இந்த 'கிறிஸ்துமஸ் நட்சத்திரம்' அதாவது வியாழன்-சனி சந்திக்கும் ஒளி இணைப்பு தோன்ற இருப்பதாக வானியல் ஆய்வாளர்கள் கணித்து வருகின்றனர். டிசம்பர் 20- ஆம் தேதி சூரியன் மறைவிலிருந்து 22-ஆம் தேதி சூரியன் உதயமாகும் வரை, இந்த நிகழ்வு நடக்கும் எனக் கணிக்கப்பட்டிருந்தாலும், 21-ஆம் தேதி இரவே தெளிவாக கிறிஸ்துமஸ் நட்சத்திரத்தைக் காணமுடியும். அதுவும்  உலகத்தின் எந்த மூலையில் இருந்தாலும் இந்த அதிசய நிகழ்வைக் கண்டு ரசிக்கலாம் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

விண்வெளி செல்லும் இந்திய வீரர்கள்; பிரதமர் மோடி அறிவிப்பு

Published on 27/02/2024 | Edited on 27/02/2024
Prime Minister Modi's announcement on Indian astronauts in space

கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் கலந்து கொள்வதற்காகப் பிரதமர் மோடி இன்று (27-02-24) காலை கேரளா சென்றார். அதனையடுத்து, அவர் அங்குள்ள விக்ரம் சாராபாய் விண்வெளி மையத்திற்குச் சென்று ககன்யான் திட்டப்பணிகள் குறித்த பணிகளை ஆய்வு செய்தார். அவருடன், கேரளா ஆளுநர் ஆரிஃப் கான், முதல்வர் பினராயி விஜயன் உள்ளிட்டோர் இருந்தனர். 

இதனையடுத்து, மனிதர்களை விண்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளிக்குச் செல்லும் 4 வீரர்களைப் பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். அதன்படி, குரூப் கேப்டன்கள் பிரசாந்த் பாலகிருஷ்ணன், அஜித் கிருஷ்ணன், அங்கத் பிரதாப் மற்றும் விங் கமாண்டர் சுபான்ஷுசுக்லா ஆகியோர் ககன்யான் திட்டத்தின் மூலம் விண்வெளி செல்லவுள்ளனர். தேர்ந்தெடுக்கப்பட்ட வீரர்களுக்கு மிஷன் லோகா பேட்ஜ்களை பிரதமர் மோடி வழங்கினார். 

அதனைத் தொடர்ந்து பேசிய பிரதமர் மோடி, “தேர்ந்தெடுக்கப்பட்ட 4 விண்வெளி வீரர்களைச் சந்தித்து அவர்களை நாட்டுக்கு அறிமுகம் செய்து வைக்கும் வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். அவர்களுக்கு நாட்டு மக்கள் சார்பாக வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இன்றைய இந்தியாவின் பெருமை நீங்கள் தான்” என்று கூறினார். 

Next Story

கடலூர் கடற்கரையில் விழுந்த எரி விண்கற்கள்; கண்டுபிடித்த மாணவருக்குக் குவியும் பாராட்டுகள்

Published on 25/10/2023 | Edited on 25/10/2023

 

Flaming meteorites fell on Cuddalore coast; Kudos to the student who discovered it

 

கடலூர் கடற்கரையில் விழுந்த எரி விண்கற்களைக் கண்டுபிடித்த மாணவருக்குப் பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

 

கடலூர் ஒன்றிய அலுவலகத்தில் மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலராகப் பணியாற்றி வருபவர் வெங்கடேசன். இவரது மகன் அனீஸ்வர். இவர் கடலூரில் உள்ள கிருஷ்ணசாமி நினைவு மேல்நிலைப் பள்ளியில் 8-ம் வகுப்பு பயின்று வருகிறார். இவர் சிறு வயது முதல் விண் ஆய்வில் ஆர்வம் கொண்டு வருகிறார். விண் ஆய்வு குறித்து நடைபெறும் போட்டிகளில் இவர் தொடர்ந்து வெற்றிபெற்று வந்துள்ளார். இவரது ஆர்வத்தைப் பார்த்த அவரது தந்தை இவருக்குத் தொலைநோக்கி விண் ஆய்வு உபகரணங்களை வாங்கிக் கொடுத்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

 

இந்நிலையில் மாணவர் கடலூர் சில்வர் பீச் பகுதியில் தீவிர ஆய்வு மேற்கொண்டுள்ளார். அப்போது விண்ணிலிருந்து விழுந்த 56 எரிகற்களைக் கண்டுபிடித்துள்ளார். பின்னர் அவை விண்ணிலிருந்து விழுந்த எரிகற்கள் என்பதை நிரூபித்து விண் ஆய்வாளர்கள் மத்தியில் அறிமுகம் செய்துள்ளார்.

 

இதனைச் சர்வதேச விண்ணியல் தேடல் குழுமம் மற்றும் ஹவாய் ஸ்டார் வான் ஆராய்ச்சி நிறுவனமும் அமெரிக்காவின் நாசா உடன் இணைந்து விண்கற்கள் குறித்த ஆய்வில் மாணவர் அனீஸ்வரை இணைத்துக் கொண்டு அவருக்கு அங்கீகார பாராட்டுச் சான்றிதழ் வழங்கியுள்ளது. சர்வதேச வான் ஆய்வுக் குழுமம் அவரை உறுப்பினராக அங்கீகரித்துள்ளது.

 

மாணவர் அனீஸ்வர் கடலூரில் விழுந்த 56 எரிகற்களுடன் ஏழு விண்கற்களையும் சிறு கோள்கள் கண்டுபிடித்து ஹார்ட்டின் சிமன்ஸ் பல்கலைக்கழகத்தின் டெக்சாஸ் விண் ஆய்வாளர் சான்றிதழும் பெற்றுள்ளார். இதனைத் தொடர்ந்து இவர் தமிழ்நாடு இளையோர் விண் ஆய்வு மையம் என்னும் மாணவர் அமைப்பை ஏற்படுத்தி சக மாணவர்களிடையே விண்வெளி ஆய்வு குறித்த ஆர்வத்தை ஏற்படுத்த வருகிறார். இதனை அறிந்த கடலூர் மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ், மாணவரை நேரில் அழைத்துச் சால்வை அணிவித்து வாழ்த்துகளைத் தெரிவித்துப் பாராட்டினார். சிறுவயதிலேயே மாணவர் விண் ஆய்வில் வெற்றி பெறுவது அனைவர் மத்தியிலும் பாராட்டைப் பெற்றுள்ளது.