ஜப்பான்நாட்டில்தற்போது கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. வழக்கத்தைவிட அதிக பனிப்பொழிவால் ஜப்பான்நாட்டின் சிலபகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில் ஜப்பானில் நேற்று (19.01.2021) தீவிர பனிப்புயல் வீசியது. இந்த தீவிரபனிப்புயலால்மியாகி மாகாணத்தில் உள்ள தோஹோகுவிரைவு நெடுஞ்சாலைகடுமையாக பாதிக்கப்பட்டதுடன், அந்த பகுதி முழுவதுமேவெண்நிற பிரதேசமாய் காட்சியளிக்கத் தொடங்கியது.
இந்தப் பனிப்புயலால்,தோஹோகுவிரைவு நெடுஞ்சாலையில் சென்ற130க்கும் மேற்பட்ட வாகனங்கள் ஒன்றோடுஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில்ஒருவர் உயிரிழந்துள்ளார்,10 பேர் காயமடைந்துள்ளனர். மேலும் வாகனங்களில் 200 பேர் சிக்கிக்கொண்டனர். அவர்களை மீட்கும் பணி நடைபெற்றாலும், பனிப்புயலின் காரணமாக விபத்துக்குள்ளான வாகனங்களை அப்புறப்படுத்த முடியவில்லை. அந்த வாகனங்களையும் பனி மூடியுள்ளது.
வானிலை மோசமாக இருப்பதால் பாதுகாப்புடன் இருக்கும்படி ஜப்பான்பிரதமர்யோஷீஹிடே சுகாகேட்டுக்கொண்டது குறிப்பிடத்தக்கது.