Advertisment

கை, கழுத்து பகுதிகளில் பாம்பைவிட்டு விசாரணை மேற்கோண்ட இந்தோனேஷியா காவல்துறை...

ii

இந்தோனேஷியாவின் பப்புவா எனும் மாகாணத்தில் செல்ஃபோன் கைதி ஒருவரை விசாரிக்கும்போது காவல்துறையினர் அவர் மீது பாம்பை விட்டு விசாரித்துள்ளனர். இது சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது.

Advertisment

செல்ஃபோன் திருடன் ஒருவனை இந்தோனேஷியா, பப்புவா மாகாணத்தில் இருக்கும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். அதன் பின் அவரை விசாரிக்கும்போது அவர் கை, கழுத்து பகுதிகளில் ஒரு பாம்பை விட்டு அதன்பின் அந்த கைதியிடம் விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த வீடியோவை பார்பவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சிலர் காவல்துறையினரின் இந்த நடவடிக்கைக்கு கண்டணம் தெரிவித்துள்ளனர். இன்னும் சிலர் இது மனித உரிமை மீறல் எனக் கூறியுள்ளனர்.

Advertisment

இந்த விவகாரத்திற்கு இந்தோனேஷியா காவல்துறையினர் தங்களது வருத்தத்தைத் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக நடவடிக்கை எடுப்பதாகவும் அந்நாட்டு காவல்துறை உறுதியளித்துள்ளது.

Indonesia
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe