3 கண்கள் உடைய பாம்பு ஒன்றின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.
style="display:block" data-ad-client="ca-pub-7711075860389618" data-ad-slot="7632822833" data-ad-format="auto" data-full-width-responsive="true">
(adsbygoogle = window.adsbygoogle || []).push({});
ஆஸ்திரேலியாவின் வடக்குப் பகுதியிலுள்ள ஒரு நெடுஞ்சாலையில் 3 கண்கள் கொண்ட பாம்பினை கண்டுபிடித்துள்ளனர். நெடுஞ்சாலை பகுதியில் கண்டுபிடிக்கப்பட்ட இந்த பாம்பினை வடக்கு பகுதி பூங்கா மற்றும் வனவிலங்குகள் அமைப்பினர் பராமரித்துள்ளனர்.
நீண்ட காலம் வாழ்ந்த இந்த பாம்பு இறக்கும் தருவாயில் இவர்கள் கையில் கிடைத்துள்ளது. அதன்பின் அந்த பாம்பிற்கு உணவளித்து அதனை காப்பாற்ற போராடியுள்ளனர். ஆனால் அந்த பாம்பு சில நாட்களில் இறந்துள்ளது. இந்நிலையில் அந்த பாம்பினை புகைப்படம் எடுத்து பூங்கா நிர்வாகிஅதனை சமூகவலைதளத்தில் பகிர்ந்தார்.
தற்போது அந்த பாம்பின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இதுபற்றி கூறியுள்ள வடக்குப் பகுதி பூங்கா மற்றும் வனவிலங்குகளின் அதிகாரி “மூன்றாவது கண் நன்றாக இயங்கியது. இது இயற்கையான மரபணு மாற்றத்தால் உண்டான கண்ணாக இருக்கலாம்” என்று தெரிவித்தார்.