தெற்கு சூடானில்தலைநகர் ஜூபாவிலிருந்து இரோல் நகரம் நோக்கி 22 பேரை ஏற்றிக்கொண்டுசென்ற சிறிய ரக விமானம் விபத்துக்குள்ளாகி 19 பேர் பலியாகியுள்ளனர்.
இதுபற்றி ஜூபாமாநில தகவல் அமைச்சர் டபான் அபெல் கூறியதாவது, தெற்கு சூடானில் தலைநகர் ஜோபாவிலிருந்து இரோல் நகரம் நோக்கி 22 பேரை ஏற்றிக்கொண்டுசென்ற சிறியரக விமானம் ஏரியில் விபத்துக்குள்ளாகி 19 பேர் பலியாகியுள்ளனர். இருவரை காணவில்லை.இதுவரை6 வயது குழந்தை உள்பட 3 பேரைகாயங்களுடன் மீட்டுள்ளோம்.எதனால் இந்த விபத்து நடந்துள்ளது என இன்னும்தெரியவில்லை தொடர்ந்து விசாரணை நடத்திவருகிறோம் எனக்கூறியுள்ளார்.