இன்றைய விஞ்ஞான உலகில் இணையம் என்பது அனைவருக்கும் அத்தியாவசிய ஒன்றாக மாறியுள்ளது. அனைவரும் சமூகவலைதளத்தில் ஆக்டிவ் ஆக இருந்து வருகிறோம். அந்த வகையில் அமெரிக்கைவை சேர்ந்த 8 வயது சிறுவன் ஒருவன் யூடியூப் சேனல் மூலம் 26 மில்லியன் டாலர் வருமானம் ஈட்டிய சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. அவனின் இந்த சாதனைக்காக அவனை போர்ப்ஸ் பத்திரிக்கை புகழ்ந்துள்ளது.

Advertisment

ரியான் டாய்ஸ் டாய்ஸ் என்ற பெயரில் ஆரம்பத்தில் இயங்கிய சேனல் தற்போது ரியான்ஸ் வேல்டு என்ற பெயரில் அந்த பக்கத்தைசிறுவன் இயக்கி வருகிறான். சிறுவன் இந்த யூடியூப் சேனலை துவங்கி சுமார் 4 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், அந்த சேனலுக்கு 2 கோடியே 39 லட்சம் சஸ்ப்கிரைபர்ஸ் உருவாகியுள்ளனர். இந்த சேனலில் பல வீடியோக்கள் 100 கோடிக்கும் மேல் பார்வையாளர்களைப் பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.