Advertisment

உடல் ஒட்டி பிறந்த உயிரில்லா தங்கை!விடுதலைக்காக காத்திருக்கும் வினோத சிறுமி

child

பிலிப்பைன்ஸில் 14 வயது சிறுமி ஒருவருக்கு வயிற்று பகுதியில் கைகள் போன்ற உறுப்பு வளரந்துவந்துள்ள வினோதம் நடந்துள்ளது.

Advertisment

பிலிப்பைன்ஸில் எலிகன் பகுதியைச் சேர்ந்தவர் வெரோனிகா காமிங்யூஸ். 14 வயது சிறுமியான இவர் பிறக்கும் பொழுதே மார்பு பகுதியில் கைகள் போன்ற உறுப்பும் சேர்ந்து பிறந்துள்ளார். இந்நிலையில் இதனால் பல துன்பங்களையும், கஷ்டங்களையும் அனுபவித்து வந்த வெரோனிகா கிராம மக்கள் உதவியுடன் தாய்லாந்திற்கு சென்று அறுவை சிகிச்சை மூலம் அந்த உறுப்புகளை நீக்க உள்ளார்.

Advertisment

இதுபற்றி அந்த சிறுமி கூறுகையில், நான் பிறக்கும்பொழுதே என் வயிற்று பகுதியில் அந்த கை போன்ற உறுப்பு இருந்தது. நான் வளர வளர அதுவும் வளர்ந்தது. அதனால் மிகவும் சிரமப்பட்டு வந்தேன் சில நேரம் இரத்தம் கூட வரும் ஆனால் கிராம மக்களின் உதவியுடன்தற்போது அந்த கஷ்டங்கள் தீரப்போகிறது எனக்கூறியுள்ளார்.

child

சிறுமியின் தாய் இதுபற்றி கூறுகையில், இவள் பிறக்கும் முன் நான் இரட்டை குழந்தைதான் பிறக்கப்போகிறது என நினைத்தேன். ஆனால் உள்ளே இருந்த இரட்டை குழந்தைகளில் இவளது தங்கை சரியாகவளர சக்தி இல்லாததால் வெரோனிகா உடலோடு ஒட்டி வளர்த்துள்ளார். அதுதான் அந்த கைகள் போன்ற உறுப்பு. இந்த அறுவை சிகிச்சைக்கு பிறகு இவ்வளவு நாட்கள் வெரோனிகா வோடு ஒட்டி வாழ்ந்த அவளது தங்கை நீக்கப்படபோகிறாள் என குறிப்பிட்டுள்ளார்.

child world
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe