Advertisment

ஐ.எஸ் அமைப்பு இலங்கையை தேர்ந்தெடுத்தது ஏன்..? சிறிசேனா பதில்...

இலங்கையின் கொழும்புவில் கிறிஸ்துவ தேவாலயங்கள் மற்றும் தாங்கும் விடுதிகளை குறி வைத்து நடத்தப்பட்ட தொடர் தாக்குதல்களில் 300 க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 500 க்கும் அதிகமானோர் காயமடைந்தனர். உள்நாட்டு போருக்கு பிறகு இலங்கையில் நடந்த மிகப்பெரிய பயங்கரவாத தாக்குதல் இதுவே.

Advertisment

sirisena

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="7632822833"

data-ad-format="auto"

data-full-width-responsive="true">

தொடர் குண்டுவெடிப்புகளால் இலங்கையே நிலைகுலைந்த நிலையில் நாடு முழுவதும் அவசர நிலையை பிரகடனப்படுத்தினார் அதிபர் சிறிசேனா. ராணுவம் மற்றும் காவல்துறைக்கு அதிகப்படியான அதிகாரங்கள் வழங்கப்பட்டன. இந்த தாக்குதல் தொடர்பாக இதுவரை 100-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Advertisment

இந்நிலையில் பிபிசி நிறுவனத்திற்கு இலங்கை அதிபர் சிறிசேனா அளித்த பேட்டியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் இப்படியொரு தாக்குதலை நடத்த இலங்கையை தேர்ந்தெடுக்க என்ன காரணம் அவரிடம் கேள்வியெழுப்பப்பட்டது.

இதற்கு பதிலளித்த அவர், "நேர்மையாக சொல்ல வேண்டுமென்றால், நான் மிகபெரும் அதிர்ச்சியில் இருக்கிறேன். ஐ.எஸ். அமைப்பு ஏன் இலங்கையை தேர்வு செய்தது? என என்னால் புரிந்து கொள்ளவே முடியவில்லை. ‘தொடர்ந்து தோல்வியை சந்தித்து வரும் ஐ.எஸ். அமைப்பால் உலகின் சக்தி வாய்ந்த நாடுகளை எதிர்க்க முடியவில்லை. எனவே தாங்கள் இன்னும் செயல்பாட்டில்தான் இருக்கிறோம் என்பதை உலகுக்கு உணர்த்தவே இலங்கையை அவர்கள் தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்" என தெரிவித்துள்ளார்.

Colombo srilanka
இதையும் படியுங்கள்
Subscribe