Advertisment

தைப்பூச திருவிழா - யுனெஸ்கோ அங்கீகாரத்துக்கு பரிந்துரைத்த சிங்கப்பூர்!

Singapore nominates Thaipusam festival for UNESCO recognition

Advertisment

சிங்கப்பூரில் ஆண்டுதோறும் நடைபெறும் தைப்பூச திருவிழாவை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலுக்கு அந்நாட்டு அரசு பரிந்துரைத்துள்ளது.

சிங்கப்பூரில் தமிழ் மாதமான தை மாதத்தில் வரும் பூச நட்சத்திர நாளில் முருகப்பெருமான் கோயிலில் தைப்பூச திருவிழா விமர்சையாகக் கொண்டாடப்படும். இந்த விழாவில், சிங்கப்பூர் வாழ் தமிழர்கள் உள்ளிட்ட பலர் பெருமளவில் கூடுவது வழக்கம். இந்த தைப்பூச விழாவை யுனெஸ்கோவின் கலாசார பாரம்பரிய பட்டியலுக்கு சிங்கப்பூர் அரசு பரிந்துரைத்துள்ளது.

இது தவிர, மலாய் இசை வடிவமான இசை நாடகம், பாரம்பரிய மருத்துவம் உள்ளிட்ட 10 அம்சங்களையும் சிங்கப்பூர் அரசு யுனெஸ்கோ அங்கீகாரத்துக்கு பரிந்துரை செய்துள்ளது.

singapore thaipusam unesco
இதையும் படியுங்கள்
Subscribe