ADVERTISEMENT

அடுத்தவாரம் முதல் கரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் - சிங்கப்பூர் அரசு முடிவு!

06:33 PM Aug 06, 2021 | rajapathran@na…

ADVERTISEMENT

ADVERTISEMENT

சிங்கப்பூர் நாட்டில் கரோனா பரவலால், பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் தற்போது சிங்கப்பூரில் தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 9 ஆம் தேதிக்குள் மக்கள் தொகையில் 70 சதவீதம் பேருக்கு தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களும் செலுத்தப்பட்டுவிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்தொடர்ச்சியாக ஆகஸ்ட் 10 ஆம் தேதி முதல், தற்போது அமலில் இருக்கும் கட்டுப்பாடுகளில் தளர்வளிக்க முடிவு செய்துள்ளதாக சிங்கப்பூர் சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்த தளர்வுகளில் ஒரு பகுதியாக, தடுப்பூசிகளின் இரண்டு டோஸ்களையும் செலுத்திக் கொண்டவர்களில் ஐந்து பேர் வரை உணவகங்களில் ஒன்றாக அமர்ந்து சாப்பிட அனுமதியளிக்கப்படவுள்ளது.

மேலும் கரோனா அதிகமுள்ள நாடுகளை சேர்ந்த பணிக்கால விசாக்களை (work pass holders) பெற்றிருப்பவர்கள் (work pass holders), கரோனா தடுப்பூசியின் இரண்டு டோஸ்களையும் செலுத்தி கொண்டிருந்தால், அவர்களையும், அவர்களை சார்ந்தவர்களையும் (மனைவி, மகள் போன்றோர்களை) சிங்கப்பூருக்குள் அனுமதிக்கவும் அந்தநாடு முடிவு செய்துள்ளது.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT