Advertisment

பல்லா..? கல்லா..? நடுவானில் சண்டை போட்ட பெண்...

hgjghjg

நியூஸிலாந்து நாட்டின் வெலிங்டன் நகரிலிருந்து ஆஸ்திரேலியா சென்ற சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் விமானத்தில் வழங்கப்பட்ட உணவில் மனித பல் இருந்ததாக கூறி பயணி ஒருவர் சண்டையில் ஈடுபட்டுள்ளார். பிராட்லி பட்டன் என்ற அந்த பயணி, தனக்கு வழங்கப்பட்ட மதிய உணவை பிரிக்கும் போது அதில் கல் போன்ற ஏதோ ஒன்று இருந்துள்ளது. அதனை வெளியே எடுத்து பார்த்தபோது அது மனித பல் என கூறி விமான ஊழியரிடம் அதுபற்றி கேட்டுள்ளார். அதற்கு அந்த விமான பணிப்பெண் அது பல் இல்லை கல் என கூறியுள்ளார். இந்நிலையில் இது தொடர்பான விவாதம் இருவருக்கு மத்தியில் உச்சகட்டத்தை எட்டிய நிலையில், இதனால் கோபமடைந்த அந்த பயணி விமான நிறுவனத்திடம் புகார் அளித்துள்ளார். இதனையடுத்து விமானத்தில் நடைபெற்ற செயலுக்கு அந்நிறுவனம் மன்னிப்பு கோரியதுடன், இது தொடர்பான விசாரணைக்கும் உத்தரவிட்டுள்ளது.

Advertisment

singapore flight
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe