Advertisment

அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு - 11 பேர் பலி!

அமெரிக்காவின் நியு ஆர்லியன்ஸ் நகரில் உள்ள பிரென்ச் குடியிருப்பு பகுதியில் அடையாளம் தெரியாத நபர்கள் அங்கிருந்த மக்கள் மீது துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இந்த துப்பாக்கிச்சூட்டில் 11 பேர் படுகாயமடைந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து காயமடைந்தவர்களை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

Advertisment

துப்பாக்கிச்சூடு நடத்தியவர்கள் அந்த இடத்தில் இருந்து தப்பிச் சென்றுவிட்டனர். காயமடைந்தவர்களில் இரண்டு பேரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடந்த இடம் வணிக வளாகங்களுக்கு அருகில் உள்ள மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியாகும். இந்த சம்பவம் தொடர்பாக ஒரு நபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisment

blast
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe