நியூசிலாந்து நாட்டின் கிறிஸ்ட்சர்ச் நகரில் உள்ள மசூதி ஒன்றில் அடையாளம் தெரியாத நபர் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

Advertisment

christchurch

இந்த துப்பாக்கிசூட்டை அடுத்து உள்ளூர் போலீசார் மசூதியை சுற்றி வளைத்து பதிலடி கொடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த துப்பாக்கிச்சூட்டில் 6 பேர் பலியானதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

துப்பாக்கி சூடு நடைபெற்ற நேரத்தில் நியூஸிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச கிரிக்கெட் வீரர் தமிம் இக்பால் உட்பட மற்ற வீரர்களும் அந்த மசூதியில் இருந்ததாகவும், அவர்கள் பத்திரமாக மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. போலீசாருக்கும், துப்பாக்கி ஏந்திய நபர்களுக்கும் இடையே துப்பாக்கிச்சூடு நடந்து வருவதாக உள்ளூர் ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

Advertisment

அப்பகுதியில் உள்ள பள்ளிகள் மற்றும் அலுவலகங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய கிறிஸ்ட்சர்ச் பகுதி வாசிகள், வீதிகளுக்கு வருவதை தவிர்க்க வேண்டும் எனவும் சந்தேகத்துகுரிய நடமாட்டங்கள் குறித்து உடனடியாக தகவல் அறிவிக்க வேண்டும் எனவும் கிறிஸ்ட்சர்ஸ் போலீசார் தெரிவித்துள்ளனர்.