/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/al-ni.jpg)
இந்த பிரபஞ்சத்தில் மனிதர்கள் அல்லாது வேறு ஏதேனும் உயிரினங்கள் மற்ற கிரகங்களில் உள்ளதா? என்பது பற்றிய ஆராய்ச்சிகள் பல ஆண்டுகளாக நீடித்து வருகின்றது. ஏலியன்ஸ் இருக்கிறதா? இல்லையா? என்பது தொடர்பான விவாதம் நடந்து வரும் நிலையில் அது தொடர்பான கண்காட்சியை நடத்தி மெக்சிகோ அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
மெக்சிகோ நகரில் சில தினங்களுக்கு முன்பு ஏலியன்ஸ் கண்காட்சி நடத்தப்பட்டது. இந்த கண்காட்சியின் 2 ஏலியன்ஸ்களின் உடல்கள் காட்சிப்படுத்தப்பட்டன. அந்த இரண்டு ஏலியன்ஸ்கள் மனிதர்கள் போல் அல்லாமல் மிகவும் சிறிய அளவில் 2 உடல்கள் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு அனைவருக்கும் காண்பிக்கப்பட்டது. ஏலியன்களைப் போல் தோற்றம் கொண்ட அந்த உடல்கள் அளவில் சிறியதாகவும், கைகளில் மூன்று விரல்களுடனும், தலையின் பின்பகுதி பெரியதாகவும் இருந்தது.
மம்மிகளாக்கப்பட்ட அந்த உடல்களில் ஒன்றானது 1800 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்றும் மற்றொன்று 200 ஆண்டுகளுக்கு முன்பு பழமையானது என்றும் மரபணு சோதனையில் தெரியவந்தது. மேலும், உடல்களைப் பற்றி கார்பன் டேட்டிங் உள்ளிட்ட சோதனைகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள், அந்த உடல்கள் மனிதர்களின் உடல்கள் அல்ல என்பது உறுதி செய்தனர். அதனால், தற்போது வரை இந்த உடல்கள் மனிதர்கள் அல்லாது உடல்கள் என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
கடந்த 2017ஆம் ஆண்டு முதல், இந்த உடல்கள் வேற்றுகிரக மனிதர்களின் உடல்களா? என்ற கோணத்தில் ஆராய்ச்சியாளர்கள் ஆராய்ச்சி செய்து வந்தனர். மேலும், இந்த உடல்கள் பெரு நாட்டில் உள்ள நாஸ்கா பாலைவனத்தில் கண்டெடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதன் பின்னர், மனிதர்கள் அல்லாது இந்த உடல்களை தீவிர ஆய்வுகளுக்கு உட்படுத்தும் நோக்கத்தில் மெக்சிகோவிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், இந்த இரண்டு உடல்களின் மரபணுக்களை ஆய்வு செய்து அவை வேற்று கிரகவாசிகளுடையதா? என்பதை தேசிய பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் நிரூபிக்கஇருக்கிறார்கள். இந்த ஆய்வு வெற்றி பெற்றால் பூமியில் வேற்றுகிரகவாசிகளின் உடல்களை கண்டறிந்த முதல் நாடு என்ற பெருமையை மெக்சிகோ பெரும். இது தொடர்பான தகவல்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)