Advertisment

சூயஸ் கால்வாயில் சிக்கிய கப்பல்! - மீட்புப் பணிகள் தீவிரம்!

evergreen ship

உலகிலேயே அதிக நீர்வழிப்போக்குவரத்து நடைபெறும் வழித்தடம் சூயஸ் கால்வாய். இந்தக் கால்வாய் வழியாகப் பயணம் மேற்கொண்ட 400 மீட்டர் நீளமான எவர்க்ரீன் கப்பல், கடுமையான காற்று காரணமாக கடந்த 22 ஆம் தேதி வழியிலேயே சிக்கிக்கொண்டது. சிக்கிக்கொண்ட கப்பலை மீட்கும் பணிகள் தொடர்ந்து மூன்றாவது நாளாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இருப்பினும் சிக்கிக் கொண்ட கப்பலைமீட்கும் பணிகள், திங்கள் கிழமை வரை நடைபெறலாம் எனக் கூறப்படுகிறது. உலகின் கப்பல் வழி வணிகத்தில் 10 சதவீதம் சூயஸ் கால்வாய் வழியாகவேநடைபெறுகிறது. இந்தநிலையில், சூயஸ் கால்வாயில் சிக்கிக்கொண்ட கப்பலால், அந்த வழித்தடத்தில் வேறு எந்தப் போக்குவரத்தும் நடைபெறவில்லை.

Advertisment

சூயஸ் கால்வாய் முழுவதும் கப்பல்கள் தேங்கிநின்று வருகின்றன. இதனால், ஒருநாளைக்கு கிட்டத்தட்ட 9 பில்லியன்அமெரிக்க டாலர்கள் இழப்பு ஏற்படுவதாக மதிப்பிடப்பட்டுள்ளது.

Transport ship egypt
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe