ஜப்பான் முன்னாள் பிரதமர்ஷின்சோஅபே(வயது 67), மேற்கு ஜப்பானில் உள்ள நாரா எனும் இடத்தில் கடந்தவெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில்பங்கேற்றுபேசிக்கொண்டிருந்தார். அப்போது அவர்மீது மர்ம நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டதைத் தொடர்ந்து நிலை தடுமாறி கீழே சரிந்த ஷின்சோஅபேவைஉடனடியாக அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் மீட்டு, நாரா மெடிக்கல் காலேஜ் மருத்துவமனையில் சேர்த்தனர்.
அங்கு மருத்துவர்கள் அவருக்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், அவர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இந்நிலையில்ஜப்பான் நாட்டு மக்களுக்கும் உலக நாடுகளின் தலைவர்கள் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் சிங்கப்பூர் பிரதமர்லீஹசின்லூங்க்கிற்குகொலை மிரட்டல் விட்ட நபரை அந்நாட்டுபோலீசார்கைது செய்துள்ளனர்.
ஜப்பானின் முன்னாள் பிரதமர்ஷின்சோஅபேயின்படுகொலை தொடர்பான பதிவில்,சேனல்நியூஸ்ஏசியாவின்முகநூல் பக்கத்தில்இந்த அச்சுறுத்தல் காணப்பட்டது. 'ஷின்சோஅபேவுவின்கதியே உங்களுக்கும் ஏற்படும்' எனசேனல்நியூஸ்ஏசியாவின்முகநூல் பக்கத்தின் கருத்து தளத்தில்பதிவிட்டிருந்த45 வயதுள்ள அந்த நபரைபோலீசார்கைது செய்துள்ளனர்.