ADVERTISEMENT

பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்வு!

07:17 PM Apr 11, 2022 | santhoshb@nakk…

ADVERTISEMENT

ADVERTISEMENT

பாகிஸ்தான் நாட்டின் புதிய பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் இல்லாமல் நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் பாகிஸ்தான் பிரதமராக ஷெபாஸ் ஷெரிப் தேர்வு செய்யப்பட்டார். நாடாளுமன்றத்தில் ஷெபாஸ் ஷெரிப்புக்கு ஆதரவாக 174 எம்.பி.க்கள் வாக்களித்த நிலையில், முன்னாள் பிரதமர் இம்ரான் கான் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்ததால் அவையில் எதிர்க்கட்சிகளே இல்லை.

பாகிஸ்தான் நாட்டின் 23 ஆவது பிரதமராகத் தேர்வு செய்யப்பட்டுள்ள ஷெபாஸ் ஷெரிப், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் இளைய சகோதரர் ஆவர். இவர் பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண முதலமைச்சராக மூன்று முறை பதவி வகித்துள்ளார்.

தேர்வானதைத் தொடர்ந்து ஷெபாஸ் ஷெரிப் இன்றிரவு பாகிஸ்தான் பிரதமரமாக முறைப்படி, பதவியேற்றுக் கொள்கிறார்.

ADVERTISEMENT
Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT