ADVERTISEMENT

”பாகிஸ்தானுக்கு சொந்தமானது காஷ்மீர்”- பல்டி அடித்த பாக் வீரர் அப்ரிடி

01:51 PM Nov 15, 2018 | santhoshkumar


சமீபத்தில்தான் பாகிஸ்தானின் பிரதமராக பாக் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான் கான் பதவி ஏற்றுள்ளார். இருந்தாலும் பாகிஸ்தான் அரசியல் குழப்பங்கள் இன்றளவும் தீர்ந்தபாடில்லை. இம்ரான் கான் பிரதமராக வந்தபின்பும், காஷ்மீர் பிரச்சினை குறித்த தெளிவான பார்வை இல்லை. இதனால், தீர்க்கமுடியாத பிரச்சினையாக காஷ்மீர் இருந்து வருகிறது. மேலும் தீவிரவாத குழுக்களும் பாகிஸ்தானில் சுதந்திரமாகச் செயல்பட்டு வருகின்றன. தீவிரவாதிகள் இந்திய எல்லைக்குள் ஊடுறுவ அதற்கு தக்க பதிலடி கொடுத்து வருகிறது இந்திய இராணுவம்.

ADVERTISEMENT

இந்நிலையில் இங்கிலாந்து மாணவர்கள் நாடாளுமன்றத்தில் பேசியுள்ள பாக் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சகித் அஃப்ரிடி, “ பாகிஸ்தானுக்கும் காஷ்மீர் வேண்டாம், இந்தியாவுக்கும் காஷ்மீர் வேண்டாம். பாகிஸ்தானால் நான்கு மாநிலங்களையே சமாளிக்க முடியவில்லை அதேபோல அதை இந்தியாவுக்கு தர வேண்டாம். அந்த மாநிலத்தை சுதந்திரமாக விட்டுவிடுங்கள். அவர்களுக்கு தேவைப்படுவது மனிதநேயம்தான். அந்த மக்கள் எதிர்பார்பது மனிதநேயம்தான். மக்கள் நாள்தோறும் உயிரிழந்துவருவது வேதனையாக இருக்கிறது. இந்து, முஸ்ஸிம் என எந்தச் சமூகத்தில் உயிரிழப்புகள் நேரிட்டாலும் அது வேதனைதான்” என்று தெரிவித்தார். இதற்கு முன்பாக கடந்த எப்ரல் மாதத்தில் கூட காஷ்மீர் விவகாரத்தில் இந்தியாவை ட்விட்டரில் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

பின்னர் இந்த கருத்து சர்ச்சையானதை தொடர்ந்து அஃப்ரிடி தனது ட்விட்டரில், காஷ்மீர் விவகராம் இன்னும் தீர்க்கப்படவில்லை. அங்கு நடக்கும் ஒவ்வொரு போராட்டத்துக்கும் நான் உள்பட அனைத்து பாகிஸ்தானியர்களின் ஆதரவு உண்டு. காஷ்மீர் பாகிஸ்தானுக்கு சொந்தமானது” என்று பதிவிட்டிருந்தார்.


Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT