/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/modi-5-std2.jpg)
இரண்டு நாட்கள் சுற்றுப்பயணமாக பிரதமர் மோடி கடந்த புதன்கிழமை இரவு தென் கொரியா சென்றார். தென் கொரியாவின் சியோல் நகருக்கு சென்றடைந்த அவருக்கு அந்நாட்டு பாரம்பரிய முறைப்படி வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த இரண்டு நாள் சுற்றுப்பயணத்தில் பிரதமர் மோடி, வர்த்தகம் மற்றும் கலாச்சார மேம்பாடு உள்ளிட்ட துறைகளில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் 2018 ஆம் ஆண்டுக்கான அமைதிக்கான சியோல் விருது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் இன்று நடைபெற்ற விழாவில் பிரதமர் மோடிக்கு இந்த விருது வழங்கப்பட்டது. விருதை பெற்றுக்கொண்டு பேசிய பிரதமர் மோடி, ' இந்த விருதை நான் இந்தியாவின் மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன். இந்தியாவில் வாழும்1.3 பில்லியன் மக்களுக்கும் இந்த விருது சமர்ப்பணம். மேலும் அகிம்சையை உலகிற்கு போதித்த காந்தியடிகளின் 150 ஆவது பிறந்த தினம் அனுசரிக்கப்போகும் இந்த ஆண்டில் இந்த விருதினை பெறுவது மகிழ்ச்சியாக உள்ளது என கூறினார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)