Advertisment

விமானத்தில் அருகே அமர்ந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவு... 

prabhu

Advertisment

பிரபு ராமமூர்த்தி(35)இந்தியரான இவர்,அமெரிக்காவின் தொலைத்தொடர்பு நிறுவனம் ஒன்றில் இரண்டு ஆண்டுகளாக பணிபுரிந்து வருகிறார். கடந்த ஏழு மாதத்திற்கு முன்பு தனது மனைவியுடன் லாஸ்வேகாஸ் நகரில் இருந்து டெட்ராய்ட் நகருக்கு ‘ஸ்பிரிட் ஏர்லைன்ஸ்’ விமானத்தில் பயணம் செய்தார்.

மூன்று பேர் அமரக்கூடிய அந்த இருக்கை வரிசையிலநடுவில் பிரபு அமர இடப்புறத்தில் அவரது மனைவி அமர, ஜன்னலோரத்தில் 22 வயது வேறொரு பெண் அமர்ந்திருந்தார். அந்த பெண் தூங்குவதற்கு கண் மூடியவுடன் பிரபு அந்த பெண்ணிடம் பாலியல் தொந்தரவுகள் செய்துள்ளார். அந்த பெண் கண் விழித்ததும் அவருடைய ஆடை களைக்கப்பட்டிருக்க, பின்னர் பிரபு ராமமூர்த்தியின் பேரில் புகார் அளித்தார்.

இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில், அவர் குற்றவாளி என நீதிபதி நேற்று தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரம் டிசம்பர் மாதம் 12-ந் தேதி அறிவிக் கப்படும். அவருக்கு ஆயுள் சிறைத்தண்டனை விதிக்க வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

America
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe