Advertisment

மது தீர்ந்ததால் போதையில் சானிடைசரை குடித்த ஏழு பேர் பலி...

seven passed away in russia after drinking sanitizer

விருந்து நிகழ்ச்சி ஒன்றில்மது தீர்ந்ததால், சானிடைசரை குடித்த ஏழு பேர் பலியாகியுள்ள சம்பவம் ரஷ்யாவில் நடந்துள்ளது.

Advertisment

ரஷ்யாவின் மேற்குப் பகுதியில் உள்ள டாட்டின்ஸ்கி மாவட்டத்தில் உள்ள டொமடோர் என்ற பகுதியில்உள்ள வீடு ஒன்றில், விருந்து நிகழ்ச்சி நடந்துள்ளது. இதில், கலந்துகொண்ட நபர்கள், மது அருந்திவிட்டு, போதையில் இருந்தபோது, அங்கிருந்த மது பாட்டில்கள் அனைத்தும் காலியாகியுள்ளன. இரவு நேரம் என்பதால், மது வாங்குவதற்கு எந்த வழியும் இல்லை என்பதால், அங்கு ஒரு பெரிய கேனில் வைக்கப்பட்டிருந்த சானிடைசரை அவ்விருந்தில் கலந்துகொண்ட ஒன்பது பேரும் குடித்துள்ளனர்.

Advertisment

69 சதவீதம் மெத்தனால் கலக்கப்பட்ட இந்த சானிடைசரை குடித்த அவர்கள், உடனடியாக சுயநினைவை இழந்து மயங்கியுள்ளனர். பிறகு, அவசர உதவிக்குத் தகவல் அளிக்கப்பட்டு, அவர்கள் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டனர். ஆனால், இதில் சிகிச்சை பலனின்றி ஏழு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், இருவர் கோமா நிலையில் சிகிச்சைபெற்று வருகின்றனர். சானிடைசரை உடலுக்குள் செலுத்துதல், உயிருக்கு ஆபத்தை விளைவிக்கும் என ரஷ்ய அரசு, மக்களுக்குத் தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்திவரும் நிலையில், அந்நாட்டில் இந்தச் சம்பவம் நடைபெற்றுள்ளது.

corona virus Russia
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe