தாய்லாந்தை சேர்ந்த பும்பாங் என்பவர் பாலியல் தொழிலில் ஈடுபட்ட 6 பெண்களை கொன்ற காரணத்துக்காக கடந்த 2005ம் ஆண்டு கைது செய்யப்பட்டார். அவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் கடுங்காவல் சிறை தண்டனை விதித்தது. அதன் பின்பு அவர் கடந்த 15 ஆண்டுகளாக சிறை தண்டனையை அனுபவித்துக் கொண்டிருந்தார்.
googletag.cmd.push(function() {
googletag.defineSlot('/21713359017/sidebar/ad_article_4', [[300, 250], [728, 90], [300, 100], [336, 280]], 'div-gpt-ad-1557837429466-0').addService(googletag.pubads());
googletag.pubads().enableSingleRequest();
googletag.pubads().collapseEmptyDivs();
googletag.enableServices();
});
தாய்லாந்தில் அதிக சிறைக் கைதிகளை அடைத்து வைப்பதற்கான வசதி இல்லாத காரணத்தால் சிறைக்கைதிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதை அந்நாட்டு அரசு வழக்கமாக வைத்திருக்கும். அந்த வகையில் பும்பாங்கையும் சில மாதங்களுக்கு முன்பு தாய்லாந்து அரசு விடுதலை செய்யது. ஆனால், சிறையில் இருந்து வந்த சில மாதங்களிலேயே அவர் 50 வயதான ஹோட்டல் பணியாளர் ஒருவரை மீண்டும் கொன்றுள்ளார். இதனை உறுதிப்படுத்திய காவல்துறையினனர் அவரை வலை வீசி தேடி வருகிறார்கள்.