Advertisment

உடல் எடை ஒருபுறம்... கட்டுப்படுத்த முடியாத வாய் மறுபுறம் - கிம்-ஐ பற்றி சமையல்காரர் சொன்ன அதிர்ச்சி செய்தி!

jh

வடகொரிய அதிபரான கிம் ஜாங் உன் உடல்பருமன் மற்றும் புகைபிடித்தலால் இருதய நோய்க்கு ஆளாகி, அதன் காரணமாகசமீபத்தில் அறுவைசிகிச்சை செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளியாகின. மேலும், அறுவைசிகிச்சைக்குப் பின்னர் அவரது உடல்நிலை கவலைக்கிடமாக இருப்பதாக அமெரிக்க ஊடகங்களில் செய்திகள் வெளியாகின. இதற்கு வலுசேர்க்கும் வகையில் கடந்த 15- ஆம் தேதி நடைபெற்ற தனது தாத்தாவின் பிறந்த நாள் விழாவில் அதிபர் கிம் ஜாங் உன் கலந்துகொள்ளவில்லை. அதிபர் பதவியேற்றது முதல் இந்த விழாவில் அவர் பங்கேற்காதது இதுவே முதன்முறை இருந்தது.

இந்நிலையில் நேற்று தொழிற்சாலை திறப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு தான் உயிருடன் இருப்பதை உலகறிய செய்தார். இந்நிலையில் அவரின் உடல்நிலை சரியில்லாமல் போவதற்கு அவரின் உணவுப்பழக்க வழக்கமே காரணம் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது. 36 வயதான கிம் 128 கிலோ எடை உடையவர். இதுவே அவருக்கு பெரிய பிரச்சனையாக இருந்து வந்தது. மேலும் புகைப்பிடிக்கும் பழக்கமும், மது அருந்தும் பழக்கமும் அதி தீவிரமாக இருந்துள்ளது. இதுதொடர்பாக அவரின் முன்னாள் சமையல் கலைஞர் ஒருவர் கூறும்போது, கிம் அதிகம் மாட்டுக்கறி, சீஸ் முதலிய உணவுப்பொருட்களை விரும்பி சாப்பிடுவார் என்றும், மது வகைகள்இல்லாமல் அவர் இருக்க மாட்டார் என்றும் தெரிவித்துள்ளார். சீனாவின் பாரம்பரிய உணவுகளில் ஒன்றான சுறாவில் இருந்து தயாரிக்கப்படும் சோப்புகளை கிம் அதிகம் பயன்படுத்துவார் என்றும் அவர் கூறியுள்ளார்.

Advertisment
Kim Jong un
Advertisment
Show comments
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe