Skip to main content

இரண்டாம் உலகப்போரில் வீசப்பட்ட வெடிகுண்டு நேற்றுதான் செயலிழந்தது!!!

Published on 21/04/2018 | Edited on 21/04/2018

ஜெர்மனியில்  இரண்டாம்  உலகப்போரின் போது வீசப்பட்ட  வெடிகுண்டு ஒன்று  நேற்று கண்டுபிடிக்கப்பட்டது. இதற்காக அங்கிருந்த பல்லாயிரக்கணக்கான மக்கள் வெளியேற்றப்பட்டனர். அங்கிருந்த சாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டன.

second world war 2 bomb

 

ஜெர்மனி, பெர்லின்  நகரில் ஹெய்டேஸ்ராஸ்ஸி  பகுதியில் கட்டுமானப் பணியாளர்கள்  பள்ளம்தோண்டிய பொழுது  வெடிகுண்டு  ஒன்றை  கண்டுபிடித்தனர். இந்த வெடிகுண்டானது 1944 ஆம் ஆண்டு ஜெர்மனிக்கும், பிரிட்டனுக்கும் நடந்த இரண்டாம் உலகப்போரின் போது  பிரிட்டனால் வீசப்பட்ட  குண்டாகும். இந்த வெடிகுண்டை செயலிழக்க செய்ய வெடிகுண்டு நிபுணர்கள் வரவைக்கப்பட்டனர். இந்த வெடிகுண்டின் எடை சுமார் 500 கிலோவாகும். 


இந்த வெடிகுண்டை செயலிழக்க செய்வதற்கு முன், அந்தப்பகுதியில் உள்ள நேச்சுரல் ஹிஸ்டரி மியூசியம், ராணுவ மருத்துவமனை, பி.என்.டி உளவுத்துறை நிறுவனம் ஆகியவை மூடப்பட்டன. அதுமட்டுமல்லாமல் அந்தப்பகுதியை சுற்றி 800 மீட்டர் சுற்றுவட்டாரத்தில் இருந்த பத்தாயிரம் மக்கள் போலீசாரால்  தற்காலிகமாக வெளியேற்றப்பட்டனர். இதுபோன்று ஒவ்வொரு ஆண்டும் ஜெர்மனியில் இரண்டாயிரம் டன் வெடி மருந்துகளும், வெடி குண்டுகளும் கண்டுபிடிக்கப்படுகின்றன. கடந்த ஆண்டுகூட 'பிரிட்டன் ராயல் ஏர் போர்ஸால்' வீசப்பட்ட குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டது. அதனை செயலிழக்க செய்வதற்காக அறுபதாயிரம் மக்கள் வெளியேற்றப்பட்டனர்.

 

சார்ந்த செய்திகள்

Next Story

குண்டு வெடிப்பு சம்பவம்; மக்களிடம் கோரிக்கை வைத்த என்.ஐ.ஏ.

Published on 09/03/2024 | Edited on 09/03/2024
The NIA made a request to the people at bangalore hotel incident

கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கஃபே என்ற பிரபல உணவகத்தில் கடந்த 1 ஆம் தேதி பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் குண்டு வெடித்து பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர்.

இந்த வெடி விபத்தின் முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பது உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்று வட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சிகள் சில தினங்களுக்கு முன்பு வெளியானது. அந்த காட்சிகளின் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதிகளுக்கு சென்றாரோ அந்தந்த பகுதிகளில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டது. இதற்கிடையே இந்த வழக்கு தேசியப் புலனாய்வு முகமைக்கு (N.I.A.) மாற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

இதனையடுத்து, பெங்களூரு ராமேஸ்வரம் கஃபேயில் வெடிகுண்டு வைத்தவர் குறித்து தகவல் அளிப்பவருக்கு ரூ. 10 லட்சம் சன்மானமாக வழங்கப்படும் எனத் தேசியப் புலனாய்வு முகமை அறிவித்தது. இதற்கிடையே, இந்த வெடிகுண்டு சம்பவத்தின் கீழ் கிடைத்த தகவலின் அடிப்படையில், பயங்கரவாதிகள் 3 பேரை என்.ஐ.ஏ கைது செய்து விசாரணை நடத்தி வருகிறது. 

The NIA made a request to the people at bangalore hotel incident

இந்த நிலையில், குண்டு வெடிப்பு சம்பவத்தில் சந்தேகிக்கப்படும் புதிய புகைப்படங்களை என்.ஐ.ஏ வெளியிட்டு, மக்களிடம் கோரிக்கை வைத்துள்ளது. இது குறித்து என்.ஐ.ஏ வெளியிட்டுள்ள அறிவிப்பில், ‘பெங்களூரு 'ராமேஸ்வரம் கஃபே' குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரை அடையாளம் காண மக்களின் ஒத்துழைப்பு தேவை. அதனால், மேற்கண்ட புகைப்படத்தில் உள்ள நபர் குறித்த தகவல் தெரிந்தால் 08029510900, 8904241100 ஆகிய எண்களில் அழைக்கலாம். info.blr.nia@gov.in என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம். உங்கள் அடையாளம் ரகசியமாக வைக்கப்படும்’ என்று தெரிவித்து குண்டு வெடிப்பில் சந்தேகிக்கப்படும் நபரின் புதிய புகைப்படங்களை வெளியிட்டு தேசியப் புலனாய்வு முகமை கோரிக்கை வைத்துள்ளது. 

Next Story

சிசிடிவியால் சிக்கிய நபர்; பதற்றத்தில் பெங்களூரு

Published on 02/03/2024 | Edited on 02/03/2024
nn

கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள ஒயிட்ஃபீல்ட் 80 அடி சாலை என்ற இடத்தில் ராமேஸ்வரம் கபே என்ற பிரபல உணவகத்தில் நேற்று பிற்பகல் 01.05 மணியளவில் திடீரென யாரும் எதிர்பாராத வேளையில் மர்மப் பொருள் வெடித்தது பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால் உணவகத்தில் தீ மளமளவெனப் பரவி பலர் படுகாயம் அடைந்தனர். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புப் படையினர் சிக்கியவர்களை மீட்டனர். இந்த வெடி விபத்தில் மொத்தம் 10 பேர் படுகாயமடைந்தனர் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முதற்கட்ட விசாரணையில், இது சிலிண்டர் வெடிப்பு இல்லை என்பதும் உறுதி செய்யப்பட்டது. அதே சமயம் வெடி விபத்து நிகழ்ந்த இடத்தில், தடயவியல் நிபுணர்கள் குழு தடயங்களைச் சேகரித்து ஆய்வு நடத்தினர். பின்னர் அது திட்டமிடப்பட்ட குண்டு வெடிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த சம்பவம் குறித்து கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா கூறுகையில், “ஓட்டலில் வெடித்தது வெடிகுண்டு தான். இது மிக வீரியம் கொண்ட ஐ.ஈ.டி. வெடிகுண்டு என்று போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஓட்டலில் இருந்த சிசிடிவி காட்சிகளை போலீசார் தொடர்ந்து ஆய்வு செய்து வருகின்றனர். ஓட்டலில் யாரோ ஒருவர் பையை வைத்துவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகள் தண்டிக்கப்படுவார்கள்''என்றார்.

One arrested on the basis of CCTV; Bengaluru under tension

இந்த சம்பவத்தை தொடர்ந்து சுமார் 3 கிலோமீட்டர் தூரத்திற்கு உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை போலீசார் கைப்பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில், இந்த சம்பவத்தின் பின்னணியில் இருக்கும் நபர்கள் யார் என்பது குறித்து தேசிய புலனாய்வு முகமை, தீவிர விசாரணையை முன்னெடுத்துள்ளது.

இந்தச் சம்பவம் பெங்களூர் நகரத்தையே பரபரப்பில் ஆழ்த்தி இருக்கும் நிலையில், ராமேஸ்வரம் கஃபே சுற்றுவட்டாரப் பகுதிகளில் பல முக்கிய இடங்களிலும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட ராமேஸ்வரம் கஃபே ஹோட்டலுக்கு மர்ம நபர் ஒருவர் வருவதும், பையை வைத்துவிட்டு வெளியே செல்வது தொடர்பான சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது. அந்த காட்சிகள் அடிப்படையில் ஒருவரை சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த நபர் எந்த பகுதியில் சென்றாரோ அந்த பகுதியில் உள்ள இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர். சந்தேகப்படும் நபரின் புகைப்படம் மற்றும் சிசிடிவி காட்சிகள் ஆகியவையும் வெளியிடப்பட்டுள்ளது.