Advertisment

எச்.ஐ.வி. மருந்து... சாதனை படைத்த ஆராய்ச்சியாளர்கள் ...

உயிர்கொல்லி நோயான எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடிப்பதில் அமெரிக்காவின்நெப்ரஸ்கா பல்கலைக்கழக மருத்துவ மைய ஆராய்ச்சியாளர்கள்புதிய சாதனை படைத்துள்ளனர்.

Advertisment

scientists successfully removed hiv virus from rat's blood

பல ஆண்டுகளாக எய்ட்ஸ் நோய்க்கு மருந்து கண்டறிய உலகம் முழுவதும் பல்வேறு ஆராய்ச்சிகள் நடந்து வருகின்றன. அந்த வகையில் இந்த ஆராய்ச்சியில் ஒரு மைல்கல்லாக எலிகளின் உடலில் இருந்து எச்.ஐ.வி. கிருமி வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.

எச்.ஐ.வி நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட ஒரு எலியை சோதனைக்குள்ளாக்கி புதிதாக கண்டறியப்பட்ட மருந்தை அதனுள் செலுத்தியுள்ளனர் ஆராய்ச்சியாளர்கள். இதன் பலனாக, எலியின் ஜீன்-களில் இருந்து எச்.ஐ.வி கிருமி முற்றிலுமாக நீங்கியுள்ளது. எச்.ஐ.விக்கான தீர்வு கிடைப்பதில் இது முதல் வெற்றி என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இதன் அடுத்தகட்ட சோதனைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

America AIDS
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe